07
Dec
RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. இவ்விழாவினில் எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது.. பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்கிறது ரொம்ப சந்தோசம். தயாரிப்பாளர் இயக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி. ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியதாவது… மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும் போதே நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தது. இறுதிக்காட்சிகளில் வாணி மேடம் அட்டகாசாமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. பரத்தும் நானும் ஃபிரண்ட் இந்தப்படத்தில் அவர் பின்னியிருக்கிறார். படத்தை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதை காண…