`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபி க்கு கிடைத்த பெருமை

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபி க்கு கிடைத்த பெருமை

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர் முன்னனி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜுனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி  நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சென்ற வருடம் இவர் நடன இயக்குனராக பணியாற்றிய  `சுஃபியும் சுஜாதாயும்' மலையாள திரைப்படம் வெளியாகி படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பலரது பாராட்டை பெற்றது. நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்'…
Read More
கிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.!

கிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.!

நடிகை நமீதா முதன் முறையாக தயாரிக்கும் "பெளவ் வெளவ்" படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் நமீதா. இதன் படப்பிடிப்பு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகில் நடந்து கொண்டிருந்த போது, நமீதாவின் மொபைல் தவறி கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றுக்குள் மொபைல் விழுவதைக் கண்டு பதட்டத்தில் அதைப் பிடிக்க முயற்சி செய்த நமீதாவும் கிணற்றுக்குள் விழுந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பதறிய போது, "கட் கட் சூப்பர்" என கை தட்டினர், இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா. இந்த செய்தியை உண்மை என்று நம்பிய மக்கள் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டனர். நமீதாஸ் புரொடக்சன்ஸ் மற்றும் எஸ் நாத் பிக்சர்ஸ் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் "பெளவ் வெளவ்" படத்தின் வசனம் மற்றும் பாடல்களை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார். கிருஷ்ணா பி.ஏஸ். ஒளிப்பதிவு செய்கிறார். ரெஜிமோன்…
Read More
அமலா பால் பென்ஸ் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு?

அமலா பால் பென்ஸ் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு?

பிரபல நடிகை அமலா பால் போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் தனது பென்ஸ் காரை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி சென்னை டிரான்ஸ் கார் நிறுவனத்தில் இருந்து ஏ கிளாஸ் வகை பென்ஸ் காரை ஒன்றை ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.இந்த காரை புதுச்சேரி முகவரி ஒன்றை கொடுத்து அந்த மாநிலத்தில் இருந்து பதிவு எண் பெற்று நடிகை அமலா பால் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி முகவரி என்று நடிகை அமலா பால் கொடுத்தது போலி முகவரி என்று தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் அமலா பால் கொடுத்த முகவரியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர் தனக்கும் அமலா பாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வரி…
Read More