23
Jul
"அவள் வருவாளா" என கைகளை குவித்து காதலியை அழைக்க கூட சரியாக வராது தடுமாறினார் சரவணன் எனும் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் ஒளிப் பதிவாளர் 'கே.வி ஆனந்த்' பேட்டியொன்றில் " சத்தியமாக இந்த பையன் எல்லாம் பணக்கார நடிகர் வீட்டுல பொறந்துட்டு வராத நடிப்பை செய்யறேன்னு வந்துட்டு ஏன் நம் உயிரை வாங்கறானுக...னு தா நினைச்சேன்." என பேசியிருந்தார். சூர்யாவுடன் ஜோடி போட்ட சிம்ரனுக்கும் கிட்டதட்ட (விஐபி லேட் ரிலீஸ்) அது முதல் படம் தான் எனினும் சிம்ரன் தன்னுடைய பெர்பாமன்சில் வெளுத்து வாங்கியது வேறு சூர்யாவை தியேட்டர்களில் கேலி பொருளாக்கி யிருந்தது. மணிரத்னமின் பேனர், உடன் நடித்த விஜயின் மாஸ், அட்டகாசமான பாடல்கள், வசந்தின் ஜனரஞ்சக இயக்கம் அனைத்துமாக இணைந்து படத்தை ஓரளவுக்கு காப்பாற்றி விட்டன. சூர்யா தமிழகத்துக்கு அறிமுகமாகினார். சிவக்குமாரின் "உள்ளத்தை அள்ளித்தா ஜெய்கணேஷ்" தனமான மிலிட்டரி வளர்ப்பில் வளர்ந்த பிள்ளை இது என்பது சூர்யாவின் ஆரம்பகால…