13                                    
                                    
                                        Jun                                    
                                
                            
                        
                        
                    
                        மியூசிக் டைரக்டர், சிங்கர், ஆக்டர், புரொடியூஸர் மற்றும் பின்னணிப் பாடகர். கூடவே "இசை இளவரசன்" என்றும் அழைக்கப்படுற ஜிவி பிரகாஷ் பர்த் டேயாக்கும் இன்னிக்கு! வசந்தபாலன் டைரக்ட் பண்ணிய ‘வெயில்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இப்போஓ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்துக்கு இசை அமைக்க இருக்கிறார். இது அவருக்கு இசை அமைப்பாளராக 100-வது படமாக்கும். கோலிவுட் மட்டுமில்லாம டோலிவுட், சாண்டல் வுட் அப்படீன்னு தென்னிந்திய திரையுலகில், அதிகம் தேடப்படும் இசையமைப்பாளராக மாறிப்புட்டர், ஜி.வி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் தயாரிப்பு அப்படீன்னு படு பிசியான கலைஞராக வலம் வாறார், ஜி.வி. ஆரம்பத்தில் எல்லா கலைஞர்களும் சினிமாவிற்குள் நுழைவது போல, சத்தமே இல்லாமல் நுழைந்த இவர், இப்போது இயல்பான இசையிலேயே புதுமையை புகுத்தி இளசுகளின் மனங்களில் பச்செக்குன்னு பர்மெணண்டான ஒரு இடத்தைப் பிடிச்சிட்டார்.. . இளையராஜா சாரோட 'அன்னக்கிளி',…                    
                                            
                                    