ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது

ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது

*ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் வழங்கும், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது!* ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.' இந்த படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஆர்யா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ஆர்யாவின் தோற்றம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார். குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா முதல் முறையாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்…
Read More
‘மார்டன் லவ் சென்னை’ தொடரின் இசை ஆல்பத்தை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது

‘மார்டன் லவ் சென்னை’ தொடரின் இசை ஆல்பத்தை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது

முதன் முறையாக மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள 'மார்டன் லவ் சென்னை' தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது ஒன்றுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இணையும் இந்த ஆல்பத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா, யுக பாரதி மற்றும் பாக்கியம் சங்கர் எழுதிய பாடல்களை ஷிவானி பன்னீர்செல்வம், வாகு மசான், ரம்யா நம்பீசன், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அனன்யா பட், பிரியா மாலி மற்றும் பத்மப்ரியா ராகவன் போன்ற திறமையான பாடகர்கள் பாடியுள்ளனர். மாடர்ன் லவ் சென்னை இசை ஆல்பத்தில் 14 பாடல்கள் மற்றும் 4 இசைக்கருவிகளின் ஒலித் தொகுப்புகளும் உள்ளன, அவை இப்போது அனைத்து முன்னணி இசை தளங்களிலும் கிடைக்கின்றன. அமேசான் ஒரிஜினல் தொடர் மே 18 அன்று இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் திரையிடப்படும். Click for Music Album Here…
Read More
ருத்ரன் இசை வெளியீட்டு விழா! 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவிச்சிருக்கார்

ருத்ரன் இசை வெளியீட்டு விழா! 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவிச்சிருக்கார்

ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்சிருக்கார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்றார். ருத்ரன் இசை வெளியீட்டு விழா இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 'ருத்ரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவிச்சிருக்கார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வியை புதிய முயற்சியாக வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்" அப்படீன்னு சொல்லி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
Read More
கவிதாலயா தயாரிப்பில்  ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

கவிதாலயா தயாரிப்பில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா மற்றும் முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்க உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் தயாரிக்கும் இப்படத்தை நாளை, சக்கர வியூகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஃபேமிலி மேன் -2 , ஆஃபிஸ் உள்ளிட்ட தொடர்களிலும் பல வெற்றிப்படங்களிலும் நடித்தவருமான உதய் மகேஷ் கதை - திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவரின் கதை-திரைக்கதையில் கே பாலச்சந்தர் இயக்கிய சாந்தி நிலையம் மிகவும் பிரபலமான தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளைஞர்களின் நாயகன் ஜி வி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். மலையாளத்தில் குளோப் என்ற குறும்படத்தின் மூலம்…
Read More
சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

  'சீயான் 61' பட தொடக்க விழா சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாக தயாராகும் இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர்…
Read More
“96 படத்திற்குப்பிறகு எனது அடுத்த தயாரிப்பு தான் “13” – தயாரிப்பாளர் S நந்த கோபால்

“96 படத்திற்குப்பிறகு எனது அடுத்த தயாரிப்பு தான் “13” – தயாரிப்பாளர் S நந்த கோபால்

“13” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! தயாரிப்பாளர் S நந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில், Anshu Prabhakar Films உடன் இணைந்து தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “13”. அறிமுக இயக்குநர் K விவேக் இயக்கத்தில், ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்ததனர். தயாரிப்பாளர் S நந்தகோபால் கூறியதாவது..... “96 படத்திற்குப்பிறகு எனது அடுத்த தயாரிப்பு தான் “13” திரைப்படம். 96 படம் ஆரம்பிக்கும்போது இருந்த அதே மகிழ்ச்சியுடன் இதை ஆரம்பித்துள்ளேன். அறிமுக இயக்குனர் விவேக் கதை சொன்ன விதமும், கதையமைப்பும் இந்த படத்தை என்னை தயாரிக்க வைத்தது. கொரோனா காலத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம். ரோமியோ-ஜூலியட் மற்றும் 96 போல், 13 திரைப்படமும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.…
Read More
ஐங்கரன் படம் எப்படி இருக்கு

ஐங்கரன் படம் எப்படி இருக்கு

ஐங்கரன் திரைப்பட விமர்சனம் இயக்குநர் - ரவி அரசு நடிகர்கள் - ஜீவி பிரகாஷ், ஆடுகளம் நரேன், மஹிமா நம்பியார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க, ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்கும் பட்டதாரி இளைஞன், அவனை சுற்றி நிகழும் பிரச்சனைகள் இது தான் ஐங்கரன் கதை. எப்போதும் ஒரு ஐடியா நன்றாக இருக்கிறது ஆனால் அதை சுற்றிய திரைக்கதையும் அதை சொல்லும் விதமும் தான் தமிழ் சினிமாவில் பிரச்சனையாக இருக்கிறது. நாயகனை சுற்றி கதை அமைக்க வேண்டிய அவசியமும் அதற்காக நாயகன் பல பராக்கிரம்ங்கள் புரிவதும் தான் பிரச்சனை. சமூகத்தில் நிகழும் பிரச்சனையை மையமாக வைத்து, அதனை சுற்றி அமைக்கபட்ட திரைக்கதை, படத்தின் மீதான் சுவராஸ்யத்தை கூட்டுகிறது. ஆனால் சுற்றி சுழன்றடிக்கும் திரைக்கதை இதில் பெரும் பிரச்சனையாகிறது உண்மையில் படம் இடைவேளைக்கு பிறகே ஆரம்பிக்கிறது நகைக்கடைகளை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள், பட்டதாரி இளைஞனுக்கும் ஒரு பண்ணை அதிபருக்கும் இடையே நிகழும் மோதல், நேர்மையான…
Read More