16
Nov
வெள்ளித் திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல உருமாறி வாள் சண்டை, குஸ்தி என ஆக்ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் ஹீரோவாக மாறிப்புட்டார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சிமுகரப்பட்டார். இந்த இரண்டு ஜாம்பவான் கம்பீரமாக கோடம்பாக்கத்தில் தங்கள் ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது நெக்குருகும் காதலனாக, நொறுங்கிய கணவனாக உள்ளே நுழைந்தவர்தான் ஜெமினி கணேசன். இந்தியாவின் மிக உயரிய விருந்தான பத்மஸ்ரீயைத் தன் புகழின் உச்சியிலேயே (1971) பெற்றுக்கொண்டவர் ‘காதல் மன்னன்’. தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியான இருதுருவ நாயகர்களின் இருப்பினை ஓரளவில் அசைத்துப் பார்த்த ஆளுமை ஜெமினி. ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகளின் இடைக்காலம் வரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிவாஜி, எம்ஜிஆர் எனும் பேராளுமைகளிடையே தனக்கான ஓர் இருப்பைச் சாத்தியமாக்கிக் கொண்டவர் இவர்.சுதந்திர வேட்கை சுள்ளென்று சூடு பறந்த 40களில் மதுரையும் தஞ்சையும் நூற்றுக்கணக்கான கலைஞர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுக்க, ஜெமினி கணேசன் வந்ததோ, தஞ்சை –…
