01
Feb
தயாரிப்பு: ஜீ ஸ்டூடியோஸ் இயக்கம்: கிஷோர் பாண்டுரங் பெலேகர் நடிப்பு: விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஒளிப்பதிவு : கரண் இசை: ஏ.ஆர்.ரஹ்மான் வெளியான தேதி: ஜனவரி 30, 2026 நேரம்: 2 மணி 12 நிமிடங்கள் தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் மௌனப்பட வடிவில், மனித வாழ்க்கையின் ஏமாற்றம், வறுமை, இழப்பு, பணத்தின் மதிப்பு ஆகியவற்றை பேச முயற்சிக்கும் படம் காந்தி டாக்ஸ். மும்பையின் நெருக்கடியான குடியிருப்பில், நோயாளி அம்மாவுடன் வறுமையில் வாழ்கிறார் விஜய்சேதுபதி. தினமும் வேலை தேடி அலையும் வாழ்க்கை, தொடர்ச்சியான தோல்விகள், கையில் பணமில்லாத அவலம் அவரை மனதளவில் சோர்வடைய செய்கின்றன. மறுபக்கம், அதே நகரத்தில் ஒரு விபத்தில் குடும்பத்தையும், மற்றொரு விபத்தில் சொத்துகளையும் இழந்து மனநல ரீதியாக உடைந்து நிற்கிற தொழிலதிபராக அரவிந்த்சாமி. இந்த இரண்டு துருவ வாழ்க்கைகள் ஒரு பங்களாவுக்குள் மோதும் தருணமே கதையின் மையம். மவுனப்படத்தின் முயற்சி மராட்டிய இயக்குனர் கிஷோர்…
