ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !!

ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார். ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா?…
Read More
புதிய ரொமான்டிக் காமெடி தொடர் ‘மை3’ தலைப்பு,  பிக்பாஸ் ஹவுஸில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டது !

புதிய ரொமான்டிக் காமெடி தொடர் ‘மை3’ தலைப்பு,  பிக்பாஸ் ஹவுஸில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டது !

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெருமையுடன் வழங்கும்,  புதிய ரொமான்டிக் காமெடி தொடர் ‘மை3’ தலைப்பு,  பிக்பாஸ் ஹவுஸில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டது ! சென்னை இந்தியா 2022 : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் தனது அடுத்த தமிழ் இணைய தொடரான “மை3” தொடரை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. தமிழில் வித்தியாசமான முயற்சியாக, ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. ட்ரெண்ட்லவுட் தயாரிக்கும் இந்த இணைய தொடரை தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ராஜேஷ் M இயக்குகிறார். பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இந்த தொடரின் “மை3” தலைப்பை  நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ் பிக்பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுடன் இணைந்து வார இறுதி…
Read More
பிக்பாஸ் ஷிவானி யாருக்கு ஜோடியாகிறார் தெரியுமா ?

பிக்பாஸ் ஷிவானி யாருக்கு ஜோடியாகிறார் தெரியுமா ?

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் 'பம்பர்' படத்தில் நடிகர் வெற்றிக்குஜோடியாக பிக்பாஸ் ஷிவானி  ஒப்பந்தமாகியுள்ளார் கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும்‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும்‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். சில முக்கிய காட்சிகள்தூத்துக்குடியில் படமாக்கப்படவுள்ளன. இப்படத்தின் கதாநாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஷிவானி நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார். படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார்,…
Read More
ஓவியா ஃப்ரீதான் – ஆனா அவர் படங்கள் ஸ்பீடா ரெடியாகுது!

ஓவியா ஃப்ரீதான் – ஆனா அவர் படங்கள் ஸ்பீடா ரெடியாகுது!

தனியார் சேனல்  ஒன்று  தன் வளர்ச்சிக்காக தயாரித்து வழங்கி  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளிவந்ததிலிருந்து அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.வி. குறைந்து விட்டதாம். அதே சமயம் ஓவியாவுக்கு அடுத்தடுத்து  பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனாலும், அவர் எந்தப் படங்களிலும் கமிட் ஆகாமல்  தவிர்த்து வருகிறார். இதனிடையே  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அவர் நடித்த படங்கள் கிடப்பில் இருந்தன. தற்போது அவர் நடித்த படங்களை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது, மலையாளத்தில் அவர் நடித்த படங்களைத் தமிழில் டப் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக அவர் நடித்த ‘மனுஷ்ய மிருகம்’ என்ற திரைப்படம் தமிழில் வெளிவரவிருக்கிறது. அப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே ‘ஓவியா ஆர்மி’ என அவரது ரசிகர்கள் எக்கச்சக்கமானோர் ஆதரவு தெரிவித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் நடிகை ஓவியாவுக்கு…
Read More