26
Feb
சிலம்பரசன் TR வெளியிட்ட பாலாஜி முருகதாஸின் ‘ரன்னர் ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - மகாசிவராத்திரி சிறப்பு தினத்தில் ரசிகர்களுக்கு பரிசு ! நடிகர் பாலாஜி முருகதாஸ் தனது திறமையான நடிப்பின் மூலம் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 'ஃபயர்’ திரைப்படத்தில் எவ்வித தயக்கமும் இல்லாமல் எதிர்மறையான காசி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது தனது புதிய திரைப்படமான ‘ரன்னர்’ மூலம் ரசிகர்களை ஈர்க்கத் தயாராகி வருகிறார்.. விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட (Sports Drama) கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தை சிதம்பரம் A அன்பழகன் இயக்க, ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிக்கின்றனர். இதற்கு முன்பு இத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய ‘ பாக்சர்’ மற்றும் ‘கொட்டேஷன் கேங்’ போன்ற திரைப்படங்கள் திரையுலகில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மகாசிவராத்திரி நாளை முன்னிட்டு, மாஸ் நடிகர் சிலம்பரசன் TR, ' ரன்னர்…