21
Jun
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் படம் “வேழம்”. ஜுன் 24 திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் பாடலாசிரியர் தீபிகா பேசுகையில்.., சந்தீப் எனது பள்ளி நாட்களில் இருந்தே நெருங்கிய நண்பர், இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு வரிகள் எழுத அவர் எனக்கு வாய்ப்பளித்தது மிகவும் மகிழ்ச்சி. இசையமைப்பாளர் ஜானு சந்தர் எங்கள் வகுப்புத் தோழரும் கூட. நண்பர்களுடன் இணைந்து வேலை பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கேசவன் சாருக்கு நன்றி. நடிகர் ஷாம் சுந்தர் பேசுகையில்.., நான் பிரான்சிஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இயக்குனர் சந்தீப்புடன் சில குறும்படங்களில் பணிபுரிந்துள்ளேன், அவருடைய முதல் திரைப்படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் தர வேண்டுமென எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பேன். இந்த வாய்ப்பை வழங்கிய…