Benchmark Films தயாரிப்பில், விதார்த் நடிக்கும் 25 வது படம் !

Benchmark Films தயாரிப்பில், விதார்த் நடிக்கும் 25 வது படம் !

நடிகர் விதார்த், நல்ல படங்களின் காதலன், நட்சத்திர அந்தஸ்தை பொருட்படுத்தாமல் நல்ல படங்களை தொடர்ந்து செய்து, மிகச்சிறந்த நடிகர் எனும் பெயரை பெற்றிருப்பவர். நல்ல சினிமாவின் தீவிர காதலர். வேறு வேறு ஜானரில் ஆயிரம் பொற்காசுகள், அன்பறிவு, என்றாவது ஒரு நாள், ஆற்றல், அஞ்சாமை என ஐந்துபடங்களை தற்போது செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் 25 வது படம் தற்போது தயாராகிறது. Benchmark Fims நிறுவன தயாரிப்பாளர்கள் ஜோதி முருகன், சீனிவாசன் ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் சீனிவாசன் இப்படத்தினை இயக்குகிறார். புதுமையான திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படம், ஆறு பகல்கள் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்தி திரில்லுடன் பரபரப்பாக நகரும் படத்தில், ஒவ்வொரு இரவிலும் நாயகனுக்கு ஒரு குறுப்பிட்ட கனவு வரவேண்டும் என்கின்ற தவிப்பை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 38 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஒரு பகுதி திருக்கோவிலூரில்…
Read More
ஏலே பட விளம்பரத்துக்காக நிஜமாக குச்சி ஐஸ் விற்ற சமுத்திரகனி!

ஏலே பட விளம்பரத்துக்காக நிஜமாக குச்சி ஐஸ் விற்ற சமுத்திரகனி!

28 ஜனவரி 2021 : ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள “ஏலே” படத்தில் நடிகர் சமுத்திரகனி கிராமப்புறத்தில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் “முத்துகுட்டி” எனும் கலகலப்பான மனிதராக நடிக்கிறார். படத்திற்கான விளம்பர முன்னோட்டமாக படத்தில் வரும் முதுகுட்டி கதாப்பாத்திர தோரணையில், மக்கள் புழங்கும் திருத்தணி முருகன் கோவில் முன்னால் ஏலே ஐஸ் வண்டியில் ( ஐஸ் நிறைந்த குளிரூட்டப்பட்ட வண்டி ) “குச்சி ஐஸ்” விற்பனை செய்துள்ளார். நகரம் முழுதும் முருக கடவுளின் தைப்பூச திருவிழா கொண்டாட்டத்தில் குழுமியிருக்க, மக்களுக்கு படத்தை பற்றிய அறிமுகத்தை கொண்டு செல்லும் பொருட்டு படக்குழு இவ்விடத்தை தேர்ந்தெடுத்து இந்த விளம்பரத்தினை செய்துள்ளது. சமுத்திரகனி ஐஸ் விற்பதை கண்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள் பெரும் கூட்டமாக கூடிவிட்டனர். நடிகர் சமுத்திரகனி மக்களுடன் இயல்பாக உரையாடி மகிழ்ந்து, அவர்களுக்கு குச்சி ஐஸ் தந்தார். அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்வித்தார். இதனை தொடர்ந்து இதே மாதிரியான…
Read More
லைகா புரொடக்‌சன்ஸ் வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

லைகா புரொடக்‌சன்ஸ் வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

நடிகர் சிவர்கார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள உச்சகட்ட எதிர்பார்ப்பு மிக்க படங்களின் பட்டியலில் மிக மேன்மையான இடத்தை இப்படங்கள் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியான அறிவிப்பாக, சிவகார்த்தி கேயனின் 19 வது படமாக “டான்” படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார். லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார். லைகா குழும தலைவர், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா  கூறியது... தமிழின் மிக முக்கிய நடிகர், பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாயகனான, சிவகார்த்கிகேயனுடன் இணைந்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி. அவரது அடுத்த படங்கள் ( டாக்டர் & அயலான் ) 2021 வருடத்தின் ரசிகர்களின் எதிர்பாப்பில் முதன்மை இடத்தை…
Read More
அடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்

அடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்

உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் போது, அவர்களது நினைவு கள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை 'க/பெ ரணசிங்கம்' என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள். அதற்குப் பிறகுத் தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான். தற்போது பல்வேறு முன்னணி நாயகர்கள் படங்களின் வசூலைக் கொண்டாடி வருகிறோம். அதற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் விருமாண்டி. இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் சசிகுமார். ஏப்ரலிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.விஸ்வநாதன் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத்…
Read More
எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்த ‘பத்து தல.’ படத்தில் கலையரசன்!

எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்த ‘பத்து தல.’ படத்தில் கலையரசன்!

எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘பத்து தல.’ தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜாவின் Studio Green நிறுவனம் இப் படத்தினை தயாரிக்கிறது. ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநரான இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் தொடர்ந்து இணைந்து வரும் நடிகர்களால் ரசிகர்களிடத்தில் இப்படம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர்,  டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் தற்போது நடிகர் கலையரசனும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா பேசும்போது, “இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் மிகவும் கனமான ‘அமீர்’ எனும் கதாப்பாத்திரத்தில் கலையரசன் நடிக்கவிருக்கிறார். இக்கதாப்பாத்திரம் படத்தில் சிறிதளவு நேரமே வந்தாலும் கதையில் நிறைய அழுத்தம் தரும் பாத்திரமாகும். பிரபல நடிகராகவும், பல திரைப்படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்த அனுபவம் கொண்டவராகவும் இருப்பதால் இவரை நடிக்க…
Read More
நடிகர் ரஹ்மான் ரொம்ப பிசி!

நடிகர் ரஹ்மான் ரொம்ப பிசி!

ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார். . புத்தாண்டு ரஹ்மானை பொறுத்த வரை மிகுந்த உற்சாகமான வருடம் என்று தான் சொல்லவேண்டும் . இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ரஹ்மான் கதா நாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது . மேலும் அஹம்மத் இயக்கத்தில் அர்ஜுன், 'ஜெயம்' ரவி ஆகியோருடன் இணைந்த படமான ' ஜன கன மன ', விஷாலுடன் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் ,தெலுங்கு பிசியாக உள்ள ரஹ்மான் மலையாளத்தில் புதுமுக இயக்குனர் சார்ல்ஸ் ஜோசபின் ' சமரா ' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் காஷ்மீரில் ஆரம்பமாகிறது. 2021 ரஹ்மானுக்கு பிசி ஆண்டாக அமைகிறது…
Read More
நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்!

நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்!

பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஆறு பாலா. தற்போது இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். ஓல்ட் பேட்ரியோடிக் புரொடக்‌ஷன் (Old patriotic production) தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ஆறு பாலா. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடிக்கின்றார். உடன் மூணாறு ரமேஷ், ராம்ஸ், சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு - ரமேஷ் இசை - விக்ரம் வர்மா படத்தொகுப்பு - பிரபா கலை - மாய பாண்டி மற்ற நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். பூஜையுடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.
Read More
சோனு சூட் : ‘பஞ்சாபின் அடையாளம்’ – :இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சோனு சூட் : ‘பஞ்சாபின் அடையாளம்’ – :இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளமாக அறிவிக்கக் கோரி பஞ்சாப் தேர்தல் அதிகாரி கருணா ராஜு விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு நடிகர் சோனு சூட் தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த கொரோனா மற்றும்ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சமீபத்தில் சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய…
Read More
எப்படி இருந்த நடிகர் தவசி – இப்படி ஆயிட்டாரே!- அதிர்ந்து போன கோலிவுட்!

எப்படி இருந்த நடிகர் தவசி – இப்படி ஆயிட்டாரே!- அதிர்ந்து போன கோலிவுட்!

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் தவசிக்கு சூரி , சிவகார்த்திகேயன் மற்றும் திமுக எம்எல்ஏ ஆகியோர் நிதியுதவி வழங்கி உதவியுள்ளனர் தமிழ் திரை உலகில் பிரபலமான துணை நடிகராக வலம் வருபவர் தான் தவசி. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப் படங்களில் நடித்து பிரபலமானவர். இவரை தவசி என்று சொல்வதைவிட கருப்பன் குசும்புக்காரன் எனும் ஒற்றை வசனத்தில் குறிப்பிட்டால் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். முரட்டு மீசையுடன் கிராமத்து தோற்றத்தில் காணப்படக்கூடிய இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். வாட்டசாட்டமான உடலுடன் முரட்டு மீசையுடன் இருக்கும் இவர் முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அதிர்ந்து போயுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு…
Read More
இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன்!

இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன்!

”கா….கா….கா….கா..”; ‘காவியமா நெஞ்சில் ஓவியமா’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்….’, ‘இன்று போய் நாளை வாராய்…’, ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’ போன்ற பாடல்களில் அதன் இசையின் மேன்மையையும் பாடல்களில் வெளிப்படும் வளமான கற்பனையையும் மீறி இன்றும் வசீகரிக்க வைக்கும் சி.எஸ்.ஜெயராமனின் குரல். தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்தவர் சி.எஸ்.ஜெ. ரசிகர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ வரை பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ‘இசைச் சித்தர்’ சி.எஸ். ஜெயராமன் தான். ஆம் இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன் …தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான ஒரு இசைக்கலைஞர், இசையமைப்பாளர்… (சில மிகப்பழைய படங்களில் நடித்தும் இருக்கிறார்…) (அவர் தந்தை சிதம்பரம் சுந்தரம் பிள்ளை அவர்களும் கர்நாடக இசையில் புகழ் பெற்றவர்… மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மைத்துனர் CSJ என்பது அவருக்கான இன்னொரு அறிமுகம் … ). 1950-60 களில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில்…
Read More