50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் ‘நெடுநல்வாடை’!

50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் ‘நெடுநல்வாடை’!

பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் "நெடுநல்வாடை". மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. ஆனால், அப்படி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அப்படியான ஒரு கிராமத்து வாழ்வியலை, ஒரு தாத்தா பேரன் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம்தான் "நெடுநல்வாடை". நெல்லை மாவட்டத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உண்மைக் கதை இது. மையப்பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக 'பூ ராமு' நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கிழக்குச் சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார், தென்மேற்குப் பருவக்காற்று போன்ற கிராமத்துப் படங்களின் வரிசையில் இந்தப்படமும் நிச்சயம் இடம்பெறும். ” இந்தப்படத்தை, என்னுடன் நெல்லை, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த என் நண்பர்கள் 50 பேர் இணைந்து…
Read More
விஜய் அய்யாவை நேரில் சந்தித்து நன்றி சொல்லணும் – அய்யாகண்ணு விருப்பம்

விஜய் அய்யாவை நேரில் சந்தித்து நன்றி சொல்லணும் – அய்யாகண்ணு விருப்பம்

சமீபத்தில் நடைபெற்ற தனியார் இணையதளத்தின் சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார் விஜய். அப்போது இந்தியாவில் விவசாயிகளின் நிலை குறித்து கவலை தெரிவித்துப் பேசினார். தன்னுடைய பேச்சில், "அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் என்றும், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட. முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும், வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம்" என்று பேசினார் விஜய். முன்னணி நடிகர் விஜய்யின் இந்த பேச்சுக்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகளுக்காக தொடர் போராட்டங்க ளை நடத்தியவர் அய்யாக்கண்ணு என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு நன்றி தெரிவித்து அய்யாக்கண்ணு பேசிய போது, “வல்லரசாக ஆவதை விட விவசாயிக்கு நல்லரசாக வேண்டும் என்று விஜய் ஐயா சொன்னது எங்களது வயிற்றில் பாலை வார்த்தது போலிருந்தது. நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டோம்.…
Read More