வெள்ளித்திரையின் தனிப்பெருங்கவி- ரகுவரன்: பிறந்த நாளின்று!

திரைப்பட ரசிகர்களின் மனவெளியில் ஒருபோதும் மங்காத தனித்துவமான பிம்பம் ரகுவரன். வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தனது ஆழ்ந்த கவிதை மனம், தனித்துவமான இசை ரசனை, மற்றும் அழுத்தமான உடல்மொழி ஆகியவற்றால் தலைமுறைகளைத் தாண்டியும் ஈர்க்கும் அபூர்வக் கலைஞன் அவர். இன்று டிசம்பர் 11, அந்தக் கலை ஆளுமையின் பிறந்த தினம்.  வில்லனுக்கும் ஒரு ஆத்மா உண்டு ரகுவரனின் நடிப்பு எல்லைகள் அற்றது. அவர் வில்லனாகத் திரையில் தோன்றியபோது, அது வெறும் வில்லத்தனமாக மட்டும் இருந்ததில்லை; அது புத்திசாலித்தனம், வலி, இயலாமை, மற்றும் துரோகம் ஆகிய உணர்வுகளின் சிக்கலான கலவையாக இருந்தது. குறிப்பிட்டு சொல்வதானால் வில்லன் என்றால் காட்டுத்தனமாக கத்த வேண்டும், முரட்டு லுங்கி, அழுக்குப் பனியன், கடா மீசை, கையில் பாட்டில், வாயில் புகை என்ற செட்டப்புக்குள் வராத ஒரே வில்லன் ரகுவரன் மட்டுமே கோட்சூட் அணிந்து ஹைடெக் வில்லனாக வலம் வந்து சாதித்தவர் ரகுவரன் மட்டுமே . புதிய பரிமாணம்:…
Read More
ஷாலினி கேரக்டர், ரகுவரனை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாற்றும் ஆயுதம்!

ஷாலினி கேரக்டர், ரகுவரனை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாற்றும் ஆயுதம்!

மனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகி றார்கள். அன்பார்ந்த மனைவிகள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் விஷயங்களும் உண்டுதான் . ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். நாய் குணம் மாறாது என்பது போல, ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் அந்த வீட்டில் சண்டைக்கு பதிலாக சந்தோஷம் பொங்கி வழியும். அன்பார்ந்த மனைவியிடம் இருக்கும் சிறந்த குணம் பொறுமை! சில மனைவிகள் அவர்களது கணவனை மட்டும் தான் விரும்புவார்கள். புரியவில்லையா? அவரது வேலை, பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து, அவரது மனதை மட்டுமே விரும்புவார்கள். ஆனால்'இந்த மாதிரி பொண்டாட்டியெல்லாம் படத்துல மட்டுந்தான் சார் கிடைப்பாங்க' என்று ஒரு சொலவடை தமிழகத்தில் உண்டு. ஆனால் அதையும் விட்டுவைக்கவில்லை 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம். ரகுவரனின் சட்டையைப்பிடித்து அவரது மனைவி ஷாலினி குடிக்கலல்ல அப்பறம் என்ன ஊது என சொல்வது, பலருக்கும் கல்யாண வீடியோவை…
Read More