புதுமை இயக்குநர் ஸ்ரீதர் நினைவு நாள்!

புதுமை இயக்குநர் ஸ்ரீதர் நினைவு நாள்!

முன்னொருக் காலத்தில், தயாரிப்பு நிறுவனங்கள்தான் பெருமைப்படுத்தப்பட்டன. பக்ஷிராஜா படம், ஏவிஎம் படம் என்றெல்லாம் சொன்னார்கள். ஜெமினி கம்பெனி படம், மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்று சொன்னார்கள். பிந்தைய காலகட்டம், நடிகர்களின் பக்கம் திரும்பியது. ‘எம்.கே.டி. படம்’ என்றார்கள். ‘பி.யு.சின்னப்பா’ படம் என்றார்கள். ‘கிட்டப்பா’ படம் என்றார்கள். ‘சிவாஜி படம்’ என்றார்கள். ‘எம்ஜிஆர் படம்’ என்றார்கள். அப்படி இருந்த நாயக பிம்பங்களில் இருந்த சினிமாவை, இயக்குநர் பக்கம் திசை திருப்பியது கலங்கரை விளக்கம் ஒன்று. கேப்டனை விட்டுவிட்டு, கப்பலில் பயணித்தவர்களைச் சிலாகித்ததை விடுத்து, கேப்டனின் லாகவத்தை எல்லோரும் சொல்லத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட கேப்டனாகத் திகழ்ந்தவர்... டைரக்டர் ஸ்ரீதர். ஆம்.. நம் தமிழ்த் திரையுலகில் மிகச்சிறந்த இயக்குநர்களைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயமாக ஸ்ரீதரின் பெயர் இடம்பெறும். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கமர்ஷியல்’ படங்களாக இருப்பதோடு, திரையுலகின் போக்கை மாற்றத்திற்கு உள்ளாக்கிய சிறப்பும் அவரது படைப்புகளுக்கு உண்டு. திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்கியபோதும் சரி; இரண்டாம்…
Read More
கோலிவுட் அப்பா கே.பாலசந்தர் பர்த் டே!

கோலிவுட் அப்பா கே.பாலசந்தர் பர்த் டே!

கோலிவுட்டில் ஒரு டைரக்டராக, படைப்பாளியாக, தயாரிப்பாளராக, நடிகராக, கலைஞனாக திறமைகளைத் தேடிக் கண்டுபிடித்து வாய்ப்புகளைக் கொடுப்பவராக பலரது வழிகாட்டியாக, ஆசானாக, தந்தையாக, ரசிகராக விளங்கிய பாலசந்தரைப் பற்றி பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்னும் எழுதப்பட பல்லாயிரம் பக்கங்கள் எஞ்சியுள்ளன... இன்றைய ஒரே நாளில் ஒரு கட்டுரைக்குள் அவருடைய மொத்த சிறப்புகளையும் உள்ளடக்கி அவருடைய ஆளுமைச் சித்திரத்தை வடித்துவிட முடியாது.. செயலில் ஒழுக்‍கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை, நூறு சதவீதம் தயார் நிலை, ஒருமுகப்பட்ட கவனம். இதுதான் கே.பி. என்று அழைக்‍கப்படும் கே.பாலசந்தர். நாடகங்கள் நடத்திக்‍கொண்டு சினிமா தாகத்தில் தவித்துக்‍ கொண்டிருந்த பாலசந்தருக்‍கு முன்பணம் கொடுத்து முதன் முதலாகத் திரைத்துறைக்‍கு அறிமுகப் படுத்தியவர் இராம. வீரப்பன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அபிநய சரஸ்வதி சரோஜாதேவி இணைந்து நடித்த 'தெய்வத்தாய்' என்ற திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக வரப்பெற்றார், வரம்பெற்றார். எம்.ஜி.ஆர். என்ற மிகப்பெரிய மக்கள் சக்தியின் ஃபார்முலா பாதிக்கப்படாமல், ஆனால் அதேசமயம் தன் அறிவின் அகலத்தையும் குறைத்துக்கொள்ளாமல், வசனங்களைத்…
Read More
தமிழ் & தெலுங்கு பட உலகில் தனி ஆட்சி நடத்திய இயக்குநர் பி.ஆர். பந்துலு!

தமிழ் & தெலுங்கு பட உலகில் தனி ஆட்சி நடத்திய இயக்குநர் பி.ஆர். பந்துலு!

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ், கன்னட, தெலுங்கு பட உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டைரக்டர் பி.ஆர்.பந்துலு. பிரம்மாண்டமான படங்கள் என்றால் அது பந்துலுவால் மட்டுமே முடியும் என்று அளவுக்கு, தான் தயாரித்து இயக்கிய படங்கள் அனைத்தையும் சிறந்த கருத்துச்செறிவும், கலையம்சமும் கொண்ட அரிய படைப்புகளாக அளித்தவர்.ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களாய் இன்றும் சொல்லப்படும் செசில் பி டெமிலியின் "டென் கமாண்ட்மென்ட்ஸ்' வில்லியம் வைலரின் "பென்ஹர்' போல் தமிழில் படங்கள் தயாரிக்கப்படவில்லையே என்ற குறையை ஓரளவுக்குத் தீர்த்து வைத்தவர் பி.ஆர். பந்துலு. பொதுவாக சினிமா இயக்குநர்கள் பலரும் தங்களுக்கு எந்தக் கதையில் சுலபமாக வெற்றி கொடுக்கிறதோ அது தற்காலிகமாக இருந்தாலும், மக்கள் சலிப்படையும் வகையில் அதிலேயே சுற்றிச் சுற்றி வருவார்கள்.ஒருவருக்குக் குடும்பக் கதைகளே கைகொடுக்கும், அடுத்தவர் கிராமியப் பாடல்களிலேயே திறமை காட்டுவார். மற்றவர் மசாலாப்படங்களிலேயே வெற்றிகளை குவிப்பார். இன்னொருவர் காதல் கதைகளில்தான் சோபிப்பார். இப்படி ஒருவழிப்பாதையிலேயே வெற்றி காண்பவர்கள் மற்ற புதிய…
Read More