16
Feb
இன்றளவும் கோலிவுட்வாசிகளை கவர்ந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மு.மாறன் டைரக்ட் செய்துள்ள படம், ‘கண்ணை நம்பாதே’. இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்துள்ளார். இதை இயக்கிய மாறனிடம். “தொடர்ந்து இது போன்று சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் மர்டர் மிஸ்டரி கதைகளை எடுப்பது ஏன்..?” என்ற கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பதில் இதோ: “அப்படி எல்லாம் எந்த திட்டமும் எனக்கு இல்லைங்க.. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை அடுத்து ஒரு லவ் ஸ்டோரி கதையை எழுதிக் கொண்டுதான் உதயநிதி சாரைப் போய்ப் பார்த்தேன். ஆனா அப்போ எனக்கு எப்படி இனி சஸ்பென்ஸ் கதை வேண்டாம் என்று தோன்றியதோ அதே போல் அவருக்கு ‘இனி காதல்…