22
Aug
அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார்.முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார். தற்போது சென்னையில் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்க மால்தீவ்ஸ் தீவில் படப்பிடிப்பு நடைபெற்று அத்துடன் நிறைவடைகிறது. மீதமுள்ள பாடல் காட்சிக்காக படக்குழுவினர் வருகின்ற 27-ஆம் தேதி மாலத்தீவிற்கு செல்கின்றனர். பாஸ்கர் ஒரு ராஸ்கல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்கம் : சித்திக் இசை : அம்ரேஷ் வசனம் : ரமேஷ் கண்ணா ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன் எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர் புரொடக்ஷன் டிசைனர் : …