09
Jan
குழப்பங்கள் குஷ்புவுக்கு புதிதல்ல. குழப்பி விட்டு அதில் இருந்து மீனைப் பிடிக்கும் அரசியலிலும் குஷ்பு கில்லாடி தான். ஆனால் இப்போது குஷ்புவுக்கு ஏற்பட்டிருப்பது குழப்பத்தை தாண்டிய தயக்கம். காங்கிரஸின் திடீர் அதிமுக பாசம் கலைஞர் குடும்பமும், ஸ்டாலினும் என்ன நினைத்தாலும் சரி… குஷ்பு இன்னமும் கலைஞர் அபிமானியாகத் தான் இருக்கிறார். திமுக கைவிட்ட பின்பு கூட காங்கிரஸில் இணைந்தது திமுகவையோ கலைஞரையோ விமர்சிக்க கூடாது என்பதற்கு தான். இப்போது கூட கலைஞருக்கு உடல் நலம் இல்லை என்றதும் சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. நோய்த்தொற்று காரணமாக யாரையுமே அனுமதிக்கவில்லை என்று காரணம் சொல்லிவிட்டார்கள். காங்கிரஸில் சமீபகாலமாக அதிமுகவுடன் நெருங்கலாம் என்ற போக்கு காணப்படுகிறது. காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் திருநாவுக்கரசர் அதிமுக மீது பாசம் கொண்டவர். ஜெயல்லிதாவை நெருங்கும் பொருட்டே அவர் நியமிக்கப்பட்டார் என்கிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் தலைவரான பின்னர் திமுகவை விமர்சித்தார். அதிமுக அரசுக்கு ஆதரவாக பேசினார். நக்மா…
