பழ.கருப்பையா கலந்து கொண்ட ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!!

பழ.கருப்பையா கலந்து கொண்ட ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!!

  JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார்.மேலும் இந்த படத்தில் ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். படத்தின் மூன்று பாடல்களையும் ஏ.இரமணிகாந்தன் எழுதியுள்ளார். கலை - சிவா. எடிட்டர் ஆண்டனியின் சிஷ்யையான வெரோனிகா பிரசாத் இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.   தயாரிப்பாளர் T.சிவா பேசியதாவது , “இந்த நிகழ்வை பார்க்கும் போது இசை வெளியீட்டு விழா போல தெரியவில்லை. முன்னாள் நண்பர்கள் ஒன்று சேரும் விழா போல தான் தெரிகிறது. இந்த படத்தின்…
Read More
ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது ‘ஆதி புருஷ்’ படத்தின் இரண்டாவது பாடல்

ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது ‘ஆதி புருஷ்’ படத்தின் இரண்டாவது பாடல்

  ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படம், மீண்டும் புதிய சரித்திரத்தைப் படைக்கத் தயாராகிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'ராம் சியா ராம்..' என தொடங்கும் இரண்டாவது பாடல், மே 29ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது இசையமைப்பாளர்களான சாசெட்- பரம்பரா ஆகியோரின் இசையமைப்பில் பாடலாசிரியரும், கவிஞருமான மனோஜ் முன்டாஷீர் எழுதிய இந்த பாடல், எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும். திரைத்துறை சேனல்கள், இசை சேனல்கள் , ஏனைய பொழுதுபோக்கு சேனல்கள்.. இதைத் தவிர்த்து இந்தியா முழுவதும் எழுபதிற்கும் மேற்பட்ட முன்னணி பண்பலை வானொலி நிலையங்கள், தேசிய செய்தி சேனல்கள், திறந்த வெளி விளம்பர பலகைகள், இசையை ஸ்ட்ரீமிங் செய்யும் டிஜிட்டல் தளங்கள், டிக்கெட் பார்ட்னர்கள், திரையரங்குகள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என அனைத்து முக்கிய…
Read More
வெளியானது “போர் தொழில்” டீசர்! பரபரக்கும் திரில் பயணம்!!

வெளியானது “போர் தொழில்” டீசர்! பரபரக்கும் திரில் பயணம்!!

பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்" டீசர் குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தோழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி தனது வாழ்வில், மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார். அவரது முதல் விசாரணையில் பணியில் வெற்றிபெற, அவருக்கு எதிர்தன்மை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மூத்த காவலருடன் இணைய வேண்டும். ஒன்றாக, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சைக்கோ கொலையாளியை வேட்டையாடும் பயணத்தில் ஈடுபடுகிறார்கள்., சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா…
Read More
ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடல்

ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடல்

ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலின் வழியே பிரபு ஸ்ரீராமின் தெய்வீகப் பேரொளியை அனுபவித்து மகிழவும் !!! "ஆதிபுருஷ்" படத்தில் இடம் பெற்றிருக்கும் 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் நம் தேசத்தை மட்டுமின்றி உலகையே ஈர்த்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் படத்தினை காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பாளரான அஜய்-அதுல் இசையமைத்து, மனோஜ் முன்டாஷிரின் சக்திவாய்ந்த வரிகளைக் கொண்ட இந்த அசாதாரண பாடல் பிரபு ஸ்ரீராமின் வலிமை மற்றும் சக்தியை குறிக்கும் ஒரு அற்புத அடையாளமாக அமைந்துள்ளது. கண் கவரும் காட்சிகள் மூலம் மட்டுமல்லாமல், இரட்டை இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் மற்றும் 30+ பாடகர்கள் பங்கு கொண்டு பாடலை நிகழ்த்தியுள்ளார்கள். நாசிக் மேளமும் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமும் இணைந்து அதி அற்புதமான முறையில் உருவாக்கப்பட்ட பாடல், மயக்கும்…
Read More
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும், தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !!! கொச்சி 15 மே 2023 : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியிட்டுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் இன்வஸ்டிகேசன் பின்னணியில், ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளியின்…
Read More
‘The Marvels’ திரைப்படத்தின் டீசர் வெளியானது

‘The Marvels’ திரைப்படத்தின் டீசர் வெளியானது

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் MCU யுனிவர்ஸின் அடுத்த படமாக வெளியாகிறது `The Marvels'. நியா டகோஸ்டா வின் இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ், இமான் வெல்லானி, சாமுவேல் எல். ஜாக்சன், ஜாவே ஆஷ்டன் மற்றும் பார்க் சியோ-ஜூன் ஆகியோர் நடித்துள்ளனர். 2019-ம் ஆண்டு வெளியாகி மார்வெல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'கேப்டன் மார்வெல்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் 'The Marvels' திரைப்படத்தின் டீசர் வெளியானது. நடிகை ப்ரி லார்சன் கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். https://www.youtube.com/watch?v=cMSUtgb_OH0 அது மட்டுமின்றி சமீபத்தில் ஓ.டி.டி-யில் வெளியான 'மிஸ்.மார்வெல்' வெப்சீரிஸில் இடம்பெற்றிருந்த 'கமலா கான்' பாத்திரமும், 'வாண்டாவிஷன்' தொடரில் இடம்பெற்றிருந்த 'மோனிகா ராம்போ' பாத்திரமும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களாக இடம்பெற்றுள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 10ம் தேதி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபமாக மார்வெல் திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப்…
Read More
ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியான ‘கப்ஜா’ பட டீசர்!

ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியான ‘கப்ஜா’ பட டீசர்!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கன்னட திரையுலகிலிருந்து ‘கே ஜி எஃப் 1 & 2 ‘, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டு மொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் ‘கப்ஜா’ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும்…
Read More
‘மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம், சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி !

‘மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம், சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி !

  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல சார்ட்பஸ்டர் பாடல்களுக்குப் பின்னால் உள்ள மாயாஜாலக் குரலுக்கு சொந்தக்காரரான பின்னணிப் பாடகி ரனினா ரெட்டி, ஒரு சுயாதீன இசைக் கலைஞராக வேண்டும் என்ற தனது நீண்ட காலக் கனவை இப்போது நிறைவேற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இயற்கை அன்னையின் அழகை அங்கீகரித்து ‘மன்னிப்பு’ என்ற அழகிய சுயாதீன ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். இது குறித்து ரனினா கூறுகையில் “இந்தப் பாடலை 16 வயதில் இசையமைத்தேன் மற்றும் இந்த பாடல் எனது ஆத்மாவின் ஆழத்தில் இருந்து உருவானது. பெல்காமில் வேறு பாடலுக்கு இசையமைக்கும் போது இந்த அற்புதம் நடந்தது. அந்தி நேரத்தில் நிலவொளியை ரசித்துக்கொண்டிருந்தேன். நான் நிலாவை பார்த்து எனது நன்றியுணர்வை வெளிப்படுத்தினேன், கடவுளுக்கு எனது நன்றி உணர்வை வெளிப்படுத்தினேன். ஒளி போன்ற அத்தியாவசியமான ஒன்றை இயற்கை நமக்கு எவ்வாறு ஆசீர்வதித்துள்ளது என்பதை நான் உணர்ந்தேன். நாம்…
Read More
ஹிட்டான பாடல்களும், ஸ்மார்ட்டான பின்னணியிசையும் கலந்த கலவை = சாம் சி. எஸ்

ஹிட்டான பாடல்களும், ஸ்மார்ட்டான பின்னணியிசையும் கலந்த கலவை = சாம் சி. எஸ்

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சாணி காயிதம்' படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ.. அதே போல், அவரது இசையில் உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும். நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை…
Read More
Eternals – புதிய டீசர்,- இணையத்தில் வைரலாகி வருகிறது !

Eternals – புதிய டீசர்,- இணையத்தில் வைரலாகி வருகிறது !

Eternals - புதிய வீடியோவில்,  இந்திய திருமண காட்சிகள்,  ஏஞ்சலினா ஜோலி, ரிச்சர்ட் மேடன் மற்றும் பலர் நடிப்பில்,  இணையத்தில் வைரலாகி வருகிறது ! Marvel Studios வழங்கும் மார்வல் சூப்பர்ஹீரோ திரையுலகத்தின்  25 வது திரைப்படம் Eternals, இதுவரை நீங்கள் திரையில் கண்டிராத, புத்தம் புதிய சக்தி மிக்க 10 புதிய சூப்பர்ஹீரோக்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திரைப்படம் தீபாவளி திருநாள் கொண்டாட்டமாக, நவம்பர் 5 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரமாண்ட வெளியீடாக வெளியாகிறது. Eternals டீசர் ரசிகர்களுக்கு சில ஆச்சரயங்களை தந்துள்ளது. இந்த டீசரில் முழுக்க முழுக்க இந்திய மரபிலான திருமண காட்சி ஒன்று, நடன காட்சி, இறுதியாக Eternals அனைவரும் தங்களை வெளியுலகிற்கு அறிமுகபடுத்தி கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த டீசரில் இந்திய நடிகரான ஹரீஷ் படேல் பாத்திரம் இன்னும் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.…
Read More