நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல். எட்ஜ் பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இதற்கு முன் பார்வையாளர்கள் பார்த்திராத ஷ்ருதியின் இன்னொரு பக்கம் இது. இந்த பாடலை உருவாக்க அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. இப்பாடல் இசை ரீதியான கலை வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இசை மற்றும் திரைப்பட வாழ்க்கையை சிரமமின்றி கையாண்டு வரும் ஸ்ருதி இது குறித்து கூறும்போது , “இசைதான் எனது இயல்பு, இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நான்…