05
Aug
ஒரு ஆக்டர் என்பவர், எல்லா விதத்திலும் நடிக்கோணும். அதாவது முகத்தால் நடிக்கோணும். கண்களால் நடிக்கோணும். கை அசைவுகளால் நடிக்கோணும். நடையிலும் ஓட்டத்திலும் நடிக்கொணும். இதைத்தான் ‘பாடி லாங்குவேஜ்’ என்று கொண்டாடுவாய்ங்க ரசிகர்களுங்க. மிகச் நடிகரின் அங்க அசைவுகளும் பார்வைகளும் மெளனங்களும் முகபாவனைகளும் சேஷ்டைகளும் கோணங்கித்தனங்களும் மட்டுமே நமக்குள் வெடிச்சிரிப்பைக் கொடுத்துவிடும். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிப்போம். மூச்சுமுட்டச் சிரிப்போம். கண்களில் நீர் வரச் சிரிப்போம். அதேசமயம், அந்த மனிதரின் வாழ்வின் சோகங்களை நினைத்து நினைத்து விகசிப்போம். கண்ணீர்விடுவோம். சார்லி சாப்ளின் நம்மைச் சிரிக்கவைத்தார். அவரின் வாழ்க்கையோ நமக்கு துயரத்தைக் கொடுத்தது. நம்மூரிலும் அப்படியொரு நடிகரைச் சொல்லலாம். நம்மவரும் ஓடுவார். தடக்கெனக் குதிப்பார். பரபரவென பாய்வார். இல்லாத சேட்டைகளையெல்லாம் செய்வார். அவர் செய்வதெல்லாம் இருக்கட்டும். அந்தக் கண்களை வைத்துக்கொண்டு உருட்டினாலே குபுக்கென்று சிரித்துவிடுவோம். அப்பேர்பட்ட பண்பட்ட நடிகர்தான்... சந்திரபாபு. முத்து நகரம் என்று போற்றப்படுகிற தூத்துக்குடியில் பிறந்த திரைமுத்து சந்திரபாபு. அவரின் தந்தை சுதந்திரப்…