கவின் – ப்ரீத்தி (அயோத்தி) இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் – ப்ரீத்தி (அயோத்தி) இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் டாடா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் அடுத்ததாக பியார் பிரேம காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் சதிஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாராம் கவின். இந்நிலையில், இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க தற்போதைய சென்சேஷன் நடிகை ப்ரீத்தியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறாராம்.நடிகை ப்ரீத்தி சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற அயோத்தி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் - ப்ரீத்தி இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More
தமிழின் முதன்மையான ஓ.டி.டி தளம் என்கிற பெருமையோடு நடைபோடுகிறது ஆஹா தமிழ்.

தமிழின் முதன்மையான ஓ.டி.டி தளம் என்கிற பெருமையோடு நடைபோடுகிறது ஆஹா தமிழ்.

பிராந்திய மொழி ஓ.டி.டிகளில் முதன்மையானதும் வேகமாய் வளர்ந்து வருவதுமான ஆஹா தமிழ் இப்போது தன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறது. மண்ணின், அதன் மக்களின் கதைகளைப் பேசுவதில் கவனம் செலுத்தும் ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு 'தி கிரேட் இந்தியன் கம்பெனி' எனும் தினத்தொடர். ஜனனி அசோக் குமார், விஷ்ணு, ஆர்ஜே சரித்திரன், செளந்தர்யா நஞ்சுண்டான், வினோத் மற்றும் பலர் நடிக்கும் இந்தத் தொடர் அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும்வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. பரபரப்பான சென்னையை களமாகக் கொண்டு, இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்கி விற்கும் நிறுவனமான 'தி கிரேட் இந்தியன் கம்பெனி'யின் கதையையும் அதன் பணியாளர்களின் வாழ்க்கையையும் நகைச்சுவை கலந்து பேசும் தொடர் இது. தங்கள் நிறுவனம் சந்திக்கும் சவால்களையும் தங்கள் தனிப்பட்ட வாழ்வின் பிரச்னைகளையும் கூட்டாக எப்படி அந்தப் பணியாளர்கள் சமாளிக்கிறார்கள் என்பதே இந்தத் தொடரின் சாராம்சம்.சென்னையில் இன்று நடந்த இந்தத் தொடரின் பூஜையில் அதில் நடிக்கும் நட்சத்திரங்களும் ஆஹா…
Read More
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படம் தாமதமாக வாய்ப்புள்ளது

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படம் தாமதமாக வாய்ப்புள்ளது

சிவகார்த்திகேயன் ரசிகர்கள அடுத்து பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் மாவீரன். மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து இருக்கிறார். மேலும் முக்கிய ரோல்களில் மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாதத்திற்கு மாற்றப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினியின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதத்தில் வர இருப்பதால் தான் மாவீரன் ரிலீஸ் தேதியை மாற்ற இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இது படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.  
Read More
முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளத்தை கேட்கிறாரா லோகேஷ் கனகராஜ்

முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளத்தை கேட்கிறாரா லோகேஷ் கனகராஜ்

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குனராக மாறியுள்ளவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து மாஸ் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் அடுத்த நிலைக்கு சென்றிருக்கிறார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் அன்பு-அறிவு இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டது. மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு இப்படத்திற்காக ரூபாய் 10 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
‘பொன்னியின் செல்வன்’ அனுபவத்தை பற்றி சரத்குமார் பேட்டி

‘பொன்னியின் செல்வன்’ அனுபவத்தை பற்றி சரத்குமார் பேட்டி

'கண் சிமிட்டும் நேரங்கள்'ல ஆரம்பிச்சு, இப்ப வரை 145 படங்கள் பண்ணிட்டேன். இப்ப 150வது படம் 'The Smile Man'ல நடிச்சிட்டிருக்கேன். மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு பல மொழிகள்ல நடிக்கறேன். 'ருத்ரன்'ல லாரன்ஸ் சார் என்னை நெகட்டிவ் ரோல்ல நடிக்கக் கேட்கவும், தயங்கினேன். அதன்பின் ஒரு விஷயம் புரிந்தது. இப்ப உள்ள ஆடியன்ஸ், நடிப்பை நடிப்பா மட்டும் பார்க்குறாங்கன்னு.பிரமாண்ட படங்களை உருவாக்குவதே கடினம். இந்த 'பி.எஸ் - 2'ஐ மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' என்றுதான் எடுத்துக்கணும். இந்த முயற்சியில் அவர் வெற்றியடைஞ்சிருக்கார். உலகளவில் சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கொண்டு சேர்த்திருக்கார். என்னைப் போன்ற கதையைப் படித்த சிலர் 'கொஞ்சம் வித்தியாசமா எடுத்திருக்காங்களே'ன்னு சொல்றாங்க. ஆனாலும் அவர் பிரமிப்பா எடுத்திருக்கார்னுதான் சொல்வேன். இறுதிக் காட்சியில் நந்தினி என்னைப் பார்த்து, 'இவர் அழகுக்கு மயங்குபவர் மட்டுமல்ல, உண்மையாக என்னை நேசித்த ஒருவர்'னு சொல்வாங்க. அதைப் போல, வந்தியதேவனும் 'இவரிடம் நேரிடையா போரிட்டு வெற்றி பெற முடியாது'…
Read More
நடிகை ஷாலினி விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

நடிகை ஷாலினி விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவர் ஜீ தமிழ் ஒளிப்பரப்பான சூப்பர் மாம் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் ரியாஸ் என்பவரை நடிகை ஷாலினி திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஷாலினி மற்றும் அவரது கணவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்தனர். இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் தற்போது விவாகரத்து கிடைத்துள்ளது. இந்த நிலையில் தனது தனக்கு விவாகரத்து கிடைத்துள்ளதை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் போட்டோஷூட் புகைப்படம் எடுத்து தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். ஷாலினியின் இந்த விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் ரியாஷுடன் இருக்கும் போட்டோவை கிழிப்பதை போல் அவர் பதிவிட்டுள்ளார். ஷாலினியின்…
Read More
தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது

தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிறைக்குச் சென்று வந்த பிறகு அவர் செய்யும் யாவும் வைரல் ஆகிவிடுகின்றன. அமெரிக்காவில் படிப்பை முடித்துள்ள ஆர்யன் கான் தனது தந்தையைப் போல் திரைப்படத்துறையில் நுழையத் திட்டமிட்டு இருந்தார். ஏற்கெனவே வெப் சீரிஸ்களை இயக்கத் தேவையான கதையை பிலால் சித்திக் என்பவருடன் சேர்ந்து ஆர்யன் கான் எழுதிக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாகக் கடந்த டிசம்பர் மாதமே தான் கதை எழுதிக்கொண்டிருப்பதாக சோசியல் மீடியாவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அவர் தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது படத்தில் நடிக்க வைப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அதனை ஆர்யன் கான் நிராகரித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்யன் கான் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். அதுவும் தனது தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது. பிரபல ஆடை நிறுவனம் ஒன்றுக்காக அந்த விளம்பரம்…
Read More
Sisu திரை விமர்சனம்

Sisu திரை விமர்சனம்

  எழுத்து, இயக்கம் - Jalmari Helander ஒளிப்பதிவு             - Kjell Lagerroos இசை                        - Juri Seppä, Tuomas Wäinölä ஃபின்லாந்தில் 1944 ல் ஜெர்மானிய ஹிட்லர் படைகள் பின்வாங்கும் காலகட்டத்தில் நடக்கும் கதை. ஜான் விக் டைப் ஆக்சன் படம், ஒரு முன்னாள் ராணுவ வீரனிடம் சில்மிசம் பண்ணும் ஜெர்மானிய படையை அவர் எப்படி அழிக்கிறார் திகட்ட திகட்ட ஆக்சனில் சொல்லியிருகிறார்கள். அனுபவம் வாய்ந்த சிப்பாயான Aatomi Korpi (Jorma Tommila) என்பவரை மையப்படுத்தி தான் இந்தக் கதை சுழல்கிறது . இப்படம், முதன்முறையாக டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ‘மிட்நைட் மேட்னஸ் (Midnight Madness)’ எனும் பிரிவில் திரையிடப்பட்டது. பின், ஜனவரி 27, 2023 அன்று ஃபின்லாந்தில் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்ட இப்படம், ஏப்ரல்…
Read More
இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!!

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!!

மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும் S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில், இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். படத்தின் தொழில் நுட்ப குழுவினர் விபரம் தயாரிப்பாளர் : R. ராதா கிருஷ்ணன் தயாரிப்பு நிறுவனம் : டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் எழுத்து, இயக்கம் : ஆதித்யா ஒளிப்பதிவு : கார்த்திக் முத்துக்குமார் இசை: மிஷ்கின் எடிட்டர்: இளையராஜா கலை…
Read More
‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

அறம் எண்டர்டெயின்மெண்ட், ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலரை எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டார் அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரெயிலரை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார். சமத்துவ மக்கள் கழக மாணவர் அணி மாநில செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' மற்றும் 'கடைசி விவசாயி' உள்ளிட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், 'காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை இயக்குநர் பிரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், திரைப்படங்கள் மற்றும்…
Read More