நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது !!

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது !!

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூரி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், திருச்சி பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்…
Read More
மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2 !!

மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2 !!

  இன்று கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். இந்த திரைப்படம் வெளியான போது, மிகப்பெரிய சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், இந்திய ஆக்‌ஷன் சினிமாவின் வரலாற்றைவே மாற்றியது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்க, மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்தார். மிக அழுத்தமான கதையுடன், உலகத் தரமான ஆக்‌ஷன் காட்சிகள், கண்ணுக்கு விருந்து படைக்கும் காட்சி அமைப்புகள் என — கேஜிஎஃப் சேப்டர் 2 இந்திய சினிமாவில் ஒரு கலாச்சார வெற்றியாக மாறியது. ரவி பஸ்ரூர் இசையமைத்த பின்னணி இசை மற்றும் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து வருகின்றன. சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த இந்த படம், மொழிகளை கடந்து இந்தியா முழுவதும்…
Read More
ஆரி அர்ஜுனனின் “4த் ஃப்ளோர்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

ஆரி அர்ஜுனனின் “4த் ஃப்ளோர்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர திரில்லர் திரைப்படம் “4த் ஃப்ளோர்”. தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் ஆகியோர் இப்படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக்கை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளனர். ஆரி அர்ஜுனனின் நடிப்பில் வித்தியாசமான களத்தில் அதிரடியாக வெளியாகியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L R சுந்தரபாண்டி. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தில்…
Read More
“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரொமோ வெளியீடு !!

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரொமோ வெளியீடு !!

  Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது". படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்‌ஷன், நிதின் சத்யா, மா க ப ஆனந்த், KPY புகழ், KPY தீனா, KPY பாலா, பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன், இசையமைப்பாளர் ஜிப்ரான், தீபக், தயாரிப்பாளர் சி வி குமார், லிப்ரா ரவிச்சந்திரன், மற்றும் நடிகை செளந்தர்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கம் வழியே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோவை வெளியிட்டுள்ளனர். இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை, ஒரு கலக்கலான கமர்ஷியல் படமாக சிரிக்க சிரிக்க வைக்கும் ஒரு…
Read More
நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் ‘மைனே பியார் கியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் ‘மைனே பியார் கியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குநர் ஃபைசல் எழுதி இயக்கும் 'மைனே பியார் கியா' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சஞ்சு உன்னிதன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹிர்து ஹாரூன், பிரீத்தி முகுந்தன், அஸ்கர் அலி ,மிதுன், அர்ஜு , ஜெகதீஷ், முஸ்தபா மற்றும் ஜெரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மந்தாகினி' எனும் படத்தை தொடர்ந்து ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் இது. 'முரா' எனும் வெற்றி படத்தினை தொடர்ந்து நடிகர் ஹிர்து ஹாரூன் 'மைனே பியார் கியா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 'ஸ்டார்' எனும் தமிழ் படத்திலும், 'ஆசை கூடை' எனும் சூப்பர் ஹிட்டான வீடியோ ஆல்பத்திலும் நடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் வெட்டியார், ரெடின் கிங்ஸ்லி, பாபின் பெரும்பில்லி,…
Read More
தெலுங்கு நடிகர் விக்ராந்தின் பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ’ படம் நவம்பர் 17 வெளியாகவுள்ளது!

தெலுங்கு நடிகர் விக்ராந்தின் பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ’ படம் நவம்பர் 17 வெளியாகவுள்ளது!

இளம் நாயகன் விக்ராந்தை தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் 'ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ'. மெஹ்ரீன் பிர்சாடா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். டேஃப் ப்ராக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் விக்ராந்த் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறார் . டேஃப் ஃபிராக் புரொடக்ஷன்ஸ் பேனரில் உருவாகி வரும் இப்படத்திற்கு 'ஹிருதயம்' மற்றும் குஷி புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். நடிகர் குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் சமீபத்தில் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு. சமீபத்தில் வெளியான டீசரைப் பார்த்தால், பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுடன், காதல் போன்ற பல அம்சங்களுடன் இப்படம் உருவாகியிருப்பது தெரிகிறது. மேலும், ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக் குமார் காட்சிப்படுத்திய பிரமாண்ட காட்சிகளும், ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. இப்படம் நவம்பர் 17ஆம் தேதி…
Read More
“காந்தாரா 2” படம் 2024ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் ரிஷப் ஷெட்டியின் அதிகாராப்பூர்வ அறிவிப்பு!

“காந்தாரா 2” படம் 2024ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் ரிஷப் ஷெட்டியின் அதிகாராப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய திரைப்படம் "காந்தாரா". இதில் கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்தது. இது தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரூ.16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், ரூ.400 கோடி மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வெளியாகும் என தகவல் கூறப்பட்டது. இந்நிலையில் காந்தாரா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை ரிஷப் ஷெட்டி விரைவில் முடிக்க உள்ளதாகவும் மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா முறையில் உருவாகும் "காந்தாரா 2" படம் 2024ம் ஆண்டு மே மாதத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது. இப்படம் மழைக்காலத்தில் நடக்கும் கதை என்பதால் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாத…
Read More
நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட அறிவிப்பு ! இத்தனை பிரபலங்கள் இணையப் போகிறார்களா!

நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட அறிவிப்பு ! இத்தனை பிரபலங்கள் இணையப் போகிறார்களா!

  ``நடிகர் கவுண்டமணி சாரைத் தேடி நிறைய கதைகள் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், கதை பிடிக்காமல் போனதால், எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இந்த நேரத்தில் தான் `பழனிசாமி வாத்தியார்' கதையைக் கேட்டார் அந்த கதை பிடித்து போனதும் உடனே அதில் நடிக்க சம்மதித்தார். இந்த படத்தில் கவுண்டமணியின் ஜோடியாக சஞ்சனா சிங் நடிக்கிறார். யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், ரைடர் ரவி, டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே. சதீஷ் என 11 தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒயிட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடிக்க சம்மதித்துள்ளார் . படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. முழுக்க முழுக்க சென்னையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் `கே' இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். இந்த படத்தின் கதை கவுண்டமணி சாரை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தில்…
Read More
“கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா”  சீரிஸின் டீசர் வெளியானது !!

“கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசர் வெளியானது !!

  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியிட்டுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் இன்வஸ்டிகேசன் பின்னணியில், ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளியின் சவால்மிகுந்த கொலை வழக்கினை விசாரிக்கிறார்கள் அவர்களுக்குக் கிடைக்கு ஒரே ஒரு க்ளூ ஒரே ஒரு பெயர் மற்றும் லாட்ஜின் லெட்ஜரில் பொறிக்கப்பட்ட - "ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா" எனும் போலி முகவரி. இந்த சிக்கலான சவால்…
Read More
இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் இடம் பெறும் என ஷங்கர் கூறியுள்ளார்

இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் இடம் பெறும் என ஷங்கர் கூறியுள்ளார்

ஷங்கரின் டைரக்ஷனில் போன 2018- ஆம் வருஷம் துவங்கப்பட்ட படம் தான் இந்தியன் 2 . முன்னதா இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற திரைப்படம் என்பதால், இந்தியன் 2 படத்தை கமல் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் சினிமா ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் . குறிப்பாக மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கின்றார் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் விவேக், எதிர்பாராத விதமாக கடந்த 2021 -ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். எனவே இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் இடம்பெறுமா இல்லை அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்கவைப்பார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என ஷங்கரிடம் ஸ்ட்ரிக்டா சொல்லி இருக்கிறார்.…
Read More