டிராகன்   உண்மையில் நன்றாக இருக்கிறதா ?

டிராகன் உண்மையில் நன்றாக இருக்கிறதா ?

ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு, "When Unstoppable Force meets an Immovable Object" இதில் Unstoppable Force ஆக அறம் என்ற ஒன்றே இல்லாமல், அனைவரையும் ஏமாற்றி, எல்லோரையும் மிதித்துவிட்டு மேலே ஏறும் ஒருவனையும், Immovable Object ஆக அவன் செய்து வைத்த தவறுகளின் ஒட்டுமொத்த சங்கம சுவரையும் எடுத்து கொண்டால், அது தான் டிராகன். பிரதீப் ரங்கநாதன் என்ற பெயருக்கே இப்போது பல டிக்கெட்டுகள் வித்து தீருகின்றன. ஆனால் வித்து தீரும் டிக்கெட் தகுதியானதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை சொல்லும் விதமாக தான் டிராகன் இருக்கிறது. தான் ஒரு One film Wonder அல்ல என்பதை பிரதீப் நிரூபித்து இருக்கிறார். கல்லூரி காலத்தில் படிக்காமல் அரியர் வைத்து சுற்றி கொண்டு இருந்த இளைஞன் பொய் பேச்சு, போலி சான்றிதழ் என குறுக்கு வழியின் மூலமாக தனது கோட்டையை கட்டி கொண்டு செல்ல, அவன் இதுவரை செய்த தவறின்…
Read More
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்- விமர்சனம் !!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்- விமர்சனம் !!

இந்த படத்தின் மீது இரண்டு விஷயங்களுக்காக நம்பிக்கை இருந்தது. ஒன்று, தனுஷின் மூன்றாவது இயக்கம் என்பதனால், மற்றொன்று பருவ வயது மனிதர்களை நாயகர்களாக திரையில் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டது என்பதனால். ஆனால் படம் முடிந்த பிறகு, இந்த நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று தெரிய வந்தது. உணர்வில்லாத கதைக்கு, உயிர் கொடுக்க உயிரோடு இருக்கும் எந்த மனிதனாலும் முடியாது. அது தான் இந்த படத்தின் நிலையும். தனுஷின் பேப்பரிலயே இல்லாத ஒன்று, எப்படி திரையில் வரும். Gen Z காதல் கதை என்ற பெயரில் தனுஷ் கதை உருவாக்க நினைத்தது, அற்புதமான யோசனை. தமிழில் எந்த இயக்குனரும் இந்த genre- யை தொடாதது தமிழ் சினிமாவிற்கு பெரும் காலமாக இழப்பாக இருந்து வந்தது. ஆனால் இதை பார்த்த பிறகு தான் அவர்கள் ஏன் தொடவில்லை என்று புரிந்தது. காதல், நட்பு, காதல் பிரிவு, தவறான புரிதல் என காதல் கதையில் நிறைந்து…
Read More

நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”. காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.... ஓளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசியதாவது… இயக்குனர் அறிவழகன் சாருடைய ஈரம் திரைப்படத்தில் நான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அதன் பிறகு தான் நான் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஆரம்பித்தேன். எனது முதல் படமான “மகாமுனி” திரைப்படத்தை பார்த்து, அறிவழகன் சார் என்னை இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக மாற்றினார். அதற்கு அவருக்கு நன்றிகள். இந்த திரைப்படம் எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிக…
Read More
“ஆட்டோஃகிராப்” 21 வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகிறது !!

“ஆட்டோஃகிராப்” 21 வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகிறது !!

மக்கள் கொண்டாடித்தீர்த்த படமான "ஆட்டோஃகிராப்" 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது... 2004 பிப்ரவரி 19ல் வெளியான ஆட்டோஃகிராப் பெரும் வரவேற்பை பெற்று 150 நாட்களை கடந்து சுமார் 75 திரையரங்குகளில் ஓடியது.. எந்த திரையரங்கில் பார்த்தாலும் ஆட்டோஃகிராப் திரைப்படம் மட்டுமே ஓடிய காலத்தை முதல்முதலாக உருவாக்கியது.. இதனால இப்படம் மக்களால் மறக்கமுடியாத படமாக மாறியது.. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் அதைப்போலவே உருவானது... அவைகளும் வெற்றி கண்டன.. அப்படி டிரெண்ட் செட்டிங் படமான ஆட்டோஃகிராப் வரும் மே மாதம் மீண்டும் திரையரங்குகளில் திரையிட வேலைகள் மும்மரமாக நடைபெறுகிறது.. இப்போது ஆட்டோஃகிராப் படத்தின் ஒரு முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது... இந்தியாவில் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் ஒரு படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. எதிலும் முன்னோடியாக முயற்சிகளை மெனக்கெடும் இயக்குனர் சேரன் AI தொழில்நுட்பத்தில் ஏற்கனவே வெளியான ஆட்டோஃகிராப் திரைப்படத்திற்கு உருவாக்கியிருப்பதை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் திரையுலகத்தினர்..
Read More
‘ஃபயர்’  பட வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கொண்டாட்டம் !!

‘ஃபயர்’ பட வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கொண்டாட்டம் !!

'ஃபயர்' திரைப்படம் மாபெரும் வெற்றி: அனைவருக்கும் இயக்குநர்-தயாரிப்பாளர் ஜெ எஸ் கே மனமார்ந்த நன்றி 'ஃபயர்' திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கொண்டாட்டம், நாயகன் பாலாஜி முருகதாசுக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார் ஜெ எஸ் கே இரண்டாவது வாரத்தில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'; திரையரங்குகள், காட்சிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு கடந்த வாரம் வெளியான 'ஃபயர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இயக்குநராகவும் அழுத்தமான முத்திரை பதித்துள்ள வெற்றிப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜெ எஸ் கே, 'ஃபயர்' திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் சென்னையில் உள்ள காசி டாக்கீஸில் நேற்றிரவு (பிப்ரவரி 19) கொண்டாடினார். வார நாளின் இரவுக் காட்சியிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய 'ஃபயர்' திரைப்படம் நிறைவடைந்தவுடன் திரையரங்கு நிர்வாகிகளின் உற்சாக அனுமதியோடு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளுக்கு மத்தியில் படத்தின் வெற்றியை கேக் வெட்டி குழுவினர் கொண்டாடினார்கள். ஜெ எஸ் கே, பாலாஜி…
Read More
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ்…
Read More
“கழிப்பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

“கழிப்பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

Vanshika Makkar Films சார்பில் ப்ரீத்தி அமித் குமார் தயாரிப்பில், இயக்குநர் கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "கழிப்பறை". விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன், முன்னணி திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் ப்ரீத்தி அமித் குமார் பேசியதாவது... எங்கள் திரைப்படத்திற்கு வருகை தந்து வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம், அனைவரும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டுகிறேன் நன்றி. இசையமைப்பாளர் தீனா பேசியதாவது... தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை தர முன்வந்திருக்கும், அமித்குமார், ப்ரீத்தி தம்பதிகளுக்கு நன்றி. அவர்களது பெண் பிள்ளையை இந்த படத்தில் அருமையாகப் பாட வைத்துள்ளார்கள். நான்கு பாடல்களும் மிக அருமையாக உள்ளது. ஸ்ரீகாந்த் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். கழிப்பறை மிக நல்ல கருத்து கொண்ட படம்.…
Read More
“ஜென்டில்வுமன் ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“ஜென்டில்வுமன் ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Komala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர் பேசியதாவது... ஸ்கூலில் பேசக் கூப்பிட்டாலே ஓடிப்போயிடுவோம் இந்த மேடை பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தின் கதை கேட்டவுடனே படு இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. இயக்குநர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்தார். எந்த செலவும் இழுத்து விடவில்லை, மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.   One Drop Ocean Pictures சார்பில்…
Read More
லவ் இங்க்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

லவ் இங்க்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

எம்ஆர் பிக்சர்ஸ் ஏ. மகேந்திரன் வழங்கும், அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில், ராஜ் ஐயப்பா - டெல்னா டேவிஸ் நடிக்கும் 'லவ் இங்க்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது! எம்ஆர் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் ஏ. மகேந்திரன் நல்ல கதையம்சம் சார்ந்த படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் 'லவ் இங்க்' படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஜ் ஐயப்பா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். சரியான திட்டமிடலுடன் குறுகிய காலத்தில் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை இயக்குநர் மேகராஜ் தாஸ் நேர்த்தியாக படமாக்கியுள்ளார். இப்போது படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் நடிகர்கள் சுனில் ரெட்டி, கேபிஒய் புகழ் ராமர் மற்றும் இயக்குநர்-நடிகர் ரவி மரியா ஆகியோரும் இணைந்துள்ளனர். இயக்குநர் மேகராஜ் தாஸ் கூறும்போது, “படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே சரியான திட்டமிடல் இருந்ததால் எளிதில் எங்களால் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில்…
Read More
இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட வெற்றிக் கொண்டாட்டம் !!

இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட வெற்றிக் கொண்டாட்டம் !!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவான திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுடன் இணைந்து படத்தின் வெற்றியைக் கொண்டாடினர். இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… City light pictures தயாரிப்பில், இது எங்கள் முதல்ப்படம். இந்தப்படத்தின் வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த சுசீந்திரன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு எங்களுடன் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. இப்படத்திற்காக உழைத்த ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு…
Read More