சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள ‘பலே பாண்டியா’ படத்தின் ‘ஹேப்பி’ பாடல்

சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள ‘பலே பாண்டியா’ படத்தின் ‘ஹேப்பி’ பாடல்

  ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பலே பாண்டியா'. விஷ்ணு விஷால் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்திற்கு தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருந்தார். 'பலே பாண்டியா' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹேப்பி' பாடல் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகி 10 லட்சம் பார்வைகளை கடந்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. கவிஞர் வாலி எழுதிய இப்பாடலை 20 பிரபல பாடகர்கள் பாடியதோடு திரையிலும் தோன்றி இருந்தனர். ஹரிசரண், தேவன் ஏகாம்பரம், நரேஷ் ஐயர், நவீன் மாதவ், பரவை முனியம்மா, மலேசியா வாசுதேவன், ரஞ்சித், ஆலாப் ராஜு, ரகீப் ஆலம், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ், வேல்முருகன், மாணிக்க விநாயகம், முகேஷ், மால்குடி சுபா, திவ்யா, அனிதா, சுசித்ரா, விஜய் யேசுதாஸ், ராகுல் நம்பியார் ஆகியோர் வாலியின் உற்சாக வரிகளில் நேர்மறை எண்ணங்கள் ததும்பும்…
Read More
சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு !!

சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு !!

சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது. இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட தரண் குமார், இந்த புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து, அவருடன் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளார். 'ச்சீ ப்பா தூ...' பாடலை எழுதியிருப்பதோடு அதில் ராப்…
Read More
ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘சோழநாட்டான்’ !!

ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘சோழநாட்டான்’ !!

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மும்பையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரான மாரியப்பன் முத்தையா தயாரிக்கும் 'சோழநாட்டான்' திரைப்படம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. "பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கும் 'சோழநாட்டான்' முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் நடித்த 'உழவன் மகன்' படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது. 'சோழநாட்டான்' திரைப்படத்தில் 'டைனோசர்ஸ்' மற்றும் 'ஃபேமிலி படம்' புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. லுத்துஃப் நாயகியாக நடிக்க, சௌந்தரராஜன் மற்றும் சுவேதா கர்ணா முக்கிய முன்னணி பாத்திரங்களை ஏற்க, நரேன், சீதா, பரணி மற்றும் விக்னேஷ்…
Read More
எந்த ஜாதியினரையும் காயப்படுத்தும் படமில்லை – சென்ட்ரல் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு!!

எந்த ஜாதியினரையும் காயப்படுத்தும் படமில்லை – சென்ட்ரல் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு!!

  ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில், வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில், விளிம்பு மனிதர்களுடைய வாழ்வின் வலியைச் சொல்லும் ஒரு ஆழமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ சென்ட்ரல் ” விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் பங்கேற்க, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்…. இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது… சென்ட்ரல் பட டிரெய்லரும் பாடல்களும் பார்க்க எமோஷனலாக இருந்தது. இந்த யூனிட்டில் எனக்கு யாரையும் தெரியாது. பேரரசு இந்தப்படத்தில் லீட் ரோல் செய்துள்ளதாக சொன்னார். அவரை வாழ்த்த வேண்டும் என்று தான் வந்தேன். சென்ட்ரல் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். பேரரசுவை எனக்குப் பிடிக்கும் அவர் மனிதநேயமிக்க மனிதர். கொரோனா காலத்தில் அவர் செய்த உதவிகள் மிகப்பெரிது. அவர் படங்களிலேயே சின்ன சின்ன பாத்திரங்களில்…
Read More
எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம் !!

எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம் !!

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. காமெடி நடிகராக பிரபலமான 'ஃப்ராங்க்ஸ்டர்' ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவாகர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார் . சண்டை காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி ஃபிலிமாக தயாராகும் இந்த திரைப்படத்தை…
Read More
சீயான் விக்ரம் நடிப்பில், 96 பிரேம்குமார் இயக்கும் புதிய படம் !!

சீயான் விக்ரம் நடிப்பில், 96 பிரேம்குமார் இயக்கும் புதிய படம் !!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்திய திரைப்பட உலகின் பெருமைமிகு நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 96, மெய்யழகன் புகழ் இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார். உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை வாய்ந்த ஒரு சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கின்றனர். இந்த திரைப்படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட்டின் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிக்கிறார். இப்படம், நம் மனதை ஆழமாக தொடும் கதைக்களத்துடன், பரவசமான நடிப்பை கலந்துசேர்த்த, ஒரு புதிய முயற்சியாக உருவாக உள்ளது. இத்திரைப்படத்தின் தலைப்பு, நடிகர் பட்டியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் பல ஆச்சரியமான தகவல்களுக்கு காத்திருங்கள்!
Read More
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின்- பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் . ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்களும், ்படப்பிடிப்பு குறித்த தகவலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் கவின் மற்றும் பிரியங்கா மோகன் முதன்முறையாக இணைந்திருப்பதால்.. இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
4K Dolby Atmos ஸில் 30 வருடத்துக்கு பின் பாட்ஷா உங்கள் அபிமான அரங்குகளில்!!

4K Dolby Atmos ஸில் 30 வருடத்துக்கு பின் பாட்ஷா உங்கள் அபிமான அரங்குகளில்!!

அருளாளர் ஐயா ஆர்.எம். வீரப்பன் உருவாக்கிய சத்யா மூவீஸ்-ன் மரபை அதே கலை நுணுக்கத்துடனும், வீரியத்துடனும் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கடந்த 60 ஆண்டுகாலமாக திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்ற சத்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புகழை கொண்டாடும் வேளையில், ரசிகர்கள் நெஞ்சம் கவர்ந்த எங்களின் ஆகச்சிறந்த படைப்புகளான இதயக்கனி மற்றும் பாட்ஷா ஆகிய வெற்றித் திரைப்படங்களை மீண்டும் வெளியிடுகிறோம் - அவை இப்போது காட்சி ரீதியாக மேம்படுத்தப்பட்ட 4K மற்றும் Dolby Atmos ஒலியில், அதிநவீன தொழில்நுட்பத்தால் மீட்டு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. *மக்களால் கொண்டாடப்பட்ட பாட்ஷா திரைப்படம் ஜூலை 18 2025 அன்று  அற்புதமான புதிய வடிவத்தில் திரையரங்குகளுக்குத் திரும்ப வர இருக்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை  இது வழங்கும், Atmos இல் முழு ஒலிப்பதிவையும் மீண்டும் உருவாக்கி முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது*. தமிழ் சினிமாவின்  புரட்சிகரமான முயற்சிகளில்…
Read More
தேசிங்குராஜா 2  எப்படி  இருக்கு ?

தேசிங்குராஜா 2 எப்படி இருக்கு ?

இயக்கம் - எழில் நடிகர்கள் - விமல், ஜனா , பூஜிதா பொன்னாடா , ஹரிஷிதா, ஆர் வி உதயகுமார் இசை - வித்யாசாகர் தயாரிப்பு - டிரினிட்டி கிரியேஷன் - ரவிச்சந்திரன் ஒரு ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் குற்றவாளிகளுக்கு துணை நிற்பது, லஞ்சம் வாங்குவது, காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது என பல மோசடி வேலைகளை செய்து காவல்துறையின் கலங்கமாக இருக்கிறார். அவரது ரவுடி நண்பர், அமைச்சர் மகனை கொலை செய்வதாக சவால் விடுகிறார். மேலும் அந்த இன்ஸ்பெக்டரின் கல்லூரி தோழி போலீஸ் உதவி கமிஷ்னராக வருகிறார். அமைச்சர் மகனை  பாதுகாக்கும் பொறுப்பு அந்த பெண்ணிடம் ஒப்படைக்கப்படுகிறது. அமைச்சர் மகனுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனால், அந்த பாதுகாப்பையும் மீறி சொன்னது போல் அந்த ரவுடி கொலை செய்கிறார். அமைச்சர் மகனை கொலை செய்ய காரணம் என்ன?, பாதுகாப்பு அளிக்கும் போலீஸ் அதிகாரிக்கு இதில் தொடர்பு…
Read More
‘பெத்தி’ படத்திலிருந்து சிவராஜ்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!

‘பெத்தி’ படத்திலிருந்து சிவராஜ்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!

குளோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தினை, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, வெங்கட சதீஷ் கிலாருவின் விருத்தி சினிமாஸ் தயாரிக்க, முன்னணி பேனர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகிறார்கள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது காதாப்பத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக்கை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கம்பீரமான பார்வை, கன்னத்தில் திருத்தப்பட்ட மீசை மற்றும் உருக்கமான தோற்றத்துடன், 'கௌர்நாயுடு' எனும் வீரமிகுந்த கதாபாத்திரத்தில் அவர் மிரட்டும் வகையில், ஃபர்ஸ்ட் லுக் அசத்தலாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய துணை வேடங்களிலும் நடிக்கின்றனர். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு…
Read More