30
Jul
புல்லாங்குழல் இசையில் Male Solo பாடல்கள் எப்போதும் நம் ஆன்மாவில் ஊடுருவி காலத்திற்கும் மறக்க முடியாத பாடலாக அமையும். அந்த வரிசையில் ஹரிசரண்- சச்சின் சுந்தரின் ரொமாண்டிக் சிங்கிள் 'ரதியே ரதியே...' பாடல் விரைவில் வெளியாகவுள்ள 'அந்த 7 நாட்கள்' படத்தில் இருந்து வெளியாகி இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ளது. சச்சின் சுந்தர் திரைத்துறைக்கு புதியவராக இருந்தாலும் இசைக்கு மெருகூட்டியுள்ளார். 'ரதியே ரதியே...' பாடல் மெல்லிசையாக மட்டுமல்லாது ஆழமான உணர்வையும் கொடுத்துள்ளார். ஹரிசரண் குரல் மனதை வருடும் விதமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் கதை ஆழமானது. இன்றைய சமூகத்தில் அந்நியப்பட்ட மனதுடன் இருப்பவர் தான் கதாநாயகன். அவருக்கு இணையான, தர்க்கரீதியான வழக்கறிஞர் உண்மைகள் மற்றும் பகுத்தறிவு மூலம் உலகைப் பார்க்கிறார். 'ரதியே ரதியே...' பாடல் இந்த மாறுபட்ட உலகங்களுக்கு இடையே ஒலி பாலமாக மாறி, அவர்களின் காதலை எதிரொலிக்கிறது. பாடலாசிரியர் மோகன் ராஜா உணர்ச்சிகரமான கவிதையாக பாடல் வரிகளை…
