இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது ! ‘மங்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை கயல் ஆனந்தி!

இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது ! ‘மங்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை கயல் ஆனந்தி!

  ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிகழ்வில் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 'கிடா' படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் பேசும் போது... இந்த மேடையினை எனக்குக் கொடுத்த குபேந்திரன் சார் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு பெரிய நன்றி. ஏனென்றால் இது போன்ற கண்டெண்ட் தொடர்புடைய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இப்பொழுது மிகவும் குறைவு. இப்படத்தில் பணியாற்றிய கார்த்திக் அண்ணா அவர்களுக்கு நன்றி. அவர் ஆலமரம் போன்றவர். எத்தனையோ பேருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர் அவர். இசையமைப்பாளர் தீசன் அவர்களுக்கு என்…
Read More
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ! ”’பர்த் மார்க்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஷபீர்!

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ! ”’பர்த் மார்க்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஷபீர்!

  ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பர்த் மார்க்'. இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் பேசியதாவது, "குழந்தைப் பிறப்பு முறை பற்றி இந்தப் படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ’பர்த் மார்க்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கக் காரணம் கதையோடு சேர்ந்த வந்த விஷயம் என்பதால்தான். இந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு விஷயமும் 'பர்த் மார்க்' போல எங்கள் கூடவே ஒட்டிக் கொண்டது. கார்கில் போருக்குப் பிறகு 1999-ல் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதிருக்கும் மனநிலையைதான் ஷபீரின் டேனி கதாபாத்திரம் திரையில் பிரதிபலித்திருக்கும். மிர்னாவும் ஜெனி என்ற கர்ப்பிணி பெண்ணாக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நிஜமான கர்ப்பிணியின் வயிறு,…
Read More
வரலாற்றின் உண்மையைச் சொல்லும் படம் இது! ராஜாக்கார் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை வேதிகா!

வரலாற்றின் உண்மையைச் சொல்லும் படம் இது! ராஜாக்கார் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை வேதிகா!

சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை, அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ராஜாக்கார்”. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் பலர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது. இந்நிகழ்வினில்.. திரு பீம்ஸ் இசையமைப்பாளர் பேசியதாவது.. என் தாத்தா குடூர் நாராயண ரெட்டி வரலாற்றை கூறியிருக்கிறார். இந்தப்படத்தில் மூலம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். இப்படியொரு சிறப்பான படைப்பில் நானும் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி. நடிகை வேதிகா பேசியதாவது… வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்காக என்னை அழைத்தபோது எனக்கே உண்மையான வரலாறு தெரியாது. ஹைதராபாத் மாநிலத்திற்கு…
Read More
வெங்கட் பிரபு எனக்கு கதையே சொல்ல மாட்டர்!“ரணம் அறம் தவறேல்” பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் வைபவ்!

வெங்கட் பிரபு எனக்கு கதையே சொல்ல மாட்டர்!“ரணம் அறம் தவறேல்” பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் வைபவ்!

  அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.   இசையமைப்பாளர் அரோல் கரோலி பேசியதாவது, எல்லோரும் கூறியதைப் போல் எனக்கும் ரணம் ரொம்பவே முக்கியமான திரைப்படம். எல்லோரும் மிக நேர்மையாக கடுமையாக உழைத்திருக்கிறோம். இப்படம் ஒரு நல்ல த்ரில்லராக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாக இருக்கும். திரைக்கதை கிரிப்பாக இருக்கும். ஒரு வருடத்திற்கு முன்பு இயக்குநர் செரீஃப் இக்கதை குறித்து என்னிடம் பேசும் போது, முழு ஸ்கிரிப்ட் இருக்கிறதா….?? என்று கேட்டிருந்தேன். அவர் உடனே வாய்ஸ் நோட் அனுப்புகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.…
Read More
சினிமாவை ஒதுக்கி வைக்க போகிறோம் !செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா!

சினிமாவை ஒதுக்கி வைக்க போகிறோம் !செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா!

      செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர். திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார் மற்றும் கங்கா பிரசாத் நிறுவனராக உள்ளார். அதுபோக சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, சாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே.சத்யா, தாசரதி, ஷரவ் ஆகியோர் உட்பட பலமுக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.   23 பிப்ரவரி 2024 தொடங்கும் சிசிஎல் போட்டி 17 மார்ச் 2024 வரை நடைபெறுகிறது. ஷார்ஜா, ஹைதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் என நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது. சென்னை…
Read More
தளபதி விஜய் சார் அவர் தான் இந்தப்படத்தை துவங்கி வைத்தார் ! “ வித்தைக்காரன்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சதிஸ்!.

தளபதி விஜய் சார் அவர் தான் இந்தப்படத்தை துவங்கி வைத்தார் ! “ வித்தைக்காரன்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சதிஸ்!.

White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஸ் நாயகானாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. நடிகை சிம்ரன் குப்தா பேசியதாவது.. தயாரிப்பாளர் விஜய் சார், இயக்குநர் வெங்கி ஆகியோருக்கு நன்றி. வித்தைக்காரன் எனக்கு முக்கியமான படம். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன். எனக்கு ஆதரவு தந்த சதீஸ்க்கு நன்றி. வித்தைக்கரான் கண்டிப்பாக சிறந்த வெற்றிப்படமாக இருக்கும்; நன்றி. இயக்குநர் வெங்கி பேசியதாவது.. நிறைய புரடியூசரிடம் அலைந்திருக்கிறேன். ஆனால் விஜய் சாரிடம் கதை சொன்ன உடனே ஓகே சொல்லி விட்டார். அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் நான் கேட்ட அனைத்தையும் தந்தார். படம் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். சதீஸ் பல காலமாக நண்பர், ஹீரோவாகிவிட்டார்.…
Read More
விஜய் டிவி பிரபலமான நடிகர் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

விஜய் டிவி பிரபலமான நடிகர் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  J4 ஸ்டூடியொஸ் சார்பில் T ஜெபா ஜோன்ஸ் மற்றும் S. ராஜரத்தினம் தயாரிப்பில், இயக்குநர் J சுரேஷ் இயக்கத்தில், குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜூ கீப்பர். ஒரு புலி வளர்க்கும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு புதங்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகி ஷ்ரீன் பேசியதாவது.. இந்தப்படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. என்னை நம்பி வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு என் நன்றிகள். புகழ் வாழ்த்துக்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. இயக்குநர் சுரேஷ் பேசியதாவது.. இப்படத்தை சிறப்பாக கொண்டுவரக் காரணமாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு என் முதல் நன்றிகள். சூரி என் நண்பர் மிக மிக அடக்கமானவர்…
Read More
சீமான் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து மாஸ்டர் மகேந்திரனின் புதிய படத்தினை தொடங்கி வைத்தனர்!

சீமான் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து மாஸ்டர் மகேந்திரனின் புதிய படத்தினை தொடங்கி வைத்தனர்!

தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் சனா ஸ்டுடியோஸ் வழங்கும், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் ’புரொடக்ஷன் நம்பர்.1’ படத்தை கோலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் இயக்குநர்-அரசியல் பிரமுகமான சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பைத் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. முத்து, சந்தோஷ் சிவன் & ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சார்லி, கும்கி…
Read More
நானும் சந்தானமும் கார்த்திக் யோகி இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளோம் ! ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்யா!

நானும் சந்தானமும் கார்த்திக் யோகி இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளோம் ! ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்யா!

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நடிகர் சந்தானம் பேசியதாவது, “பீப்பிள் மீடியா ஃபேக்டரி தெலுங்கில் நிறைய படங்கள் செய்திருக்கிறார்கள். தமிழிலும் இரண்டு படங்கள் செய்திருக்கிறார்கள். அதில் முதல் படமாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெளியாகிறது. 65 நாட்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள். என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்துள்ள விஸ்வா சாருக்கு நன்றி. ‘கே.ஜி.எஃப்’ எடுக்கும்போது நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு யஷ் பெரிய ஹீரோவா என்றால் அப்போது இல்லை. ஆனால், அந்தக் கதையை நம்பி அந்தப் படம் எடுத்தார்கள். இதேதான்,…
Read More
கொரோனா தொற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

கொரோனா தொற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

  2020-2021-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவர் Dr.K.வீரபாபு அவர்கள் சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில் எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து,நடித்துள்ள படம் தான் 'முடக்கறுத்தான்'. இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் Dr.K.வீரபாபு,மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் Dr.K.வீரபாபு, தமிழருவி மணியன், இயக்குனர் தங்கர் பச்சான், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் திரைப்படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.   சுரேஷ் காமாட்சி பேசியதாவது, Dr.K.வீரபாபு அவர்கள் எழுதி,இயக்கி,தயாரித்து நடிக்க போவதாக கூறியதை கேட்டு அவரது தன்னம்பிக்கையை பாராட்டியதாகவும்,அவரது சமூகத்தின் மீதான அக்கறை…
Read More