05
Sep
தமிழில், தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தவர் கங்கனா ரனாவத். பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். நடிக்க வந்த புதிதில் இவரை கண்டு கொள்ளாமல் ஒதுக்கினர். இன்று அவரது கால்ஷீட்டுக்காக கோடிகளில் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கின்றனர். சினிமா வாழ்க்கை நன்கு அமைந்த போதிலும் கங்கனாவின் காதல் வாழ்க்கை சோகமானது. இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், கங்கனா காதலித்த விவகாரம் ஏற்கனவே பல முறை அம்பலத்துக்கு வந்திருக்கிறது. நீறு பூத்த நெருப்பாக இருந்த விவகாரம் தற்போது மீண்டும் புகைய ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் பேட்டி அளித்த கங்கனா மனக்குமுறலை கொட்டி தீர்த்தார். அவர் கூறியது: ஹிருத்திக் ரோஷனும் நானும் காதலித்தோம். கடந்த 2014ம் ஆண்டு எங்களுக்குள் பிரேக் அப் ஆகி விட்டது. ஆனால் ஒரு வருடம் என்னை கொடுமைப்படுத்தினார். இன்னொரு வரை நான் காதலித்துவிடக் கூடாது என்பதை கண்காணித்து வந்தார். எனது இ மெயிலில் ஊடுருவி என்னைப் பற்றி தகாத…
