23
Oct
தென்னிந்திய திரையுலகின் டார்லிங் பிரபாஸ் பாகுபலி மூலம் பான் இந்திய அளவில் பிரபலமானார். தற்போதைக்கு இந்திய திரையுலகில் மிகபபெரும் ரசிகர் பட்டாளம் அவருக்கு இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அவரது திரைப்படங்கள் வெளியீட்டுக்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கிறது. இந்திய முழுமைக்கும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரபாஸின் பிறந்த நாளை நேற்று ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். தென்னிந்திய ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நேற்று 23 அக்டோபர் அவரது 44 பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி நேற்று ஹைதராபாத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய அவரது ரசிகர்கள், இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமான கட் அவுட் அமைத்து, கிரேனில் அதற்கு மாலை அணிவித்து, பாலபிஷேகம் செய்து, இனிப்பு விநியோகித்து கொண்டாடினார்கள். எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வகையில் வெகு பிரம்மாண்டமாக, பெரும் கொண்டாட்டமாக நடந்த இந்த நிகழ்வு, பார்வையாளர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக, அமைந்தது