அனுஷ்காவுடன் கல்யாணமா? பிரபாஸ் பதில்!

அனுஷ்காவுடன் கல்யாணமா? பிரபாஸ் பதில்!

நடிகை அனுஷ்காவுடன் காதல் என்ற தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மை இல்லை. தற் போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை’ என்று நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.  பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகர் பிரபாஸ், ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு, வெளிநாடுகளிலும் பிரபலமாகி விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிவரும் ‘சாஹோ’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில், இவரது திருமணம் குறித்து பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. நடிகை அனுஷ்காவுடன் காதல் என்றும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அவர்கள் இருவரும் இத்தகவல்களை மறுக்காததால், ஒருவேளை உண்மையாக இருக்கு மோ என்ற சந்தேகமும் இருந்தது. இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித் துள்ள பிரபாஸ், தனது திருமணம் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அப்போது அவர் கூறியது, “தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இதனால்…
Read More
போர்ச்சுக்கல் புராணம் பாடிய ஸ்ரேயா!

போர்ச்சுக்கல் புராணம் பாடிய ஸ்ரேயா!

ஏஸ்டிஆர் ஆன சிம்புவின் `AAA' படத்திற்குப் பிறகு, அரவிந்தசாமியுடன் `நரகாசுரன்' படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகை ஸ்ரேயா சரண், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக `பைசா வசூல்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துவருகிறார் ஸ்ரேயா. பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்தப் படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 28) ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்காக போர்ச்சுகல் சென்றிருந்த ஸ்ரேயா, படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்குள்ள பகுதிகளை சுற்று பார்த்திருக்கிறார். இதையடுத்து  படக்குழு இந்தியா திரும்பிய நிலையில், போர்ச்சுக்கல்லின் சந்து பொந்துகளுக்குள் சென்றுவந்த அனுபவத்தைச் சொன்னார் ஸ்ரேயா. “‘இந்த படக் கதைப்படி, நான் போர்ச்சுக்கல்ல ஒர்க் பண்றவளா நடிக்கிறேன். அவளுக்கு என்ன மாதிரியான பிரச்னை வருதுன்னு கதை போகும். இதுக்காக போர்ச்சுக்கல் போனேன். இதுவரை தென்னிந்திய படங்கள் காண்பிச்சிருக்காத லொகேஷன்களை இந்தப் படத்துல பார்க்கலாம். ஷூட்டிங்கை முடிச்சுட்டு தோழிகளோட டூர் போயிட்டேன். லிஸ்பன்…
Read More
Prabhas19 கிளாப் அடிச்சாச்சு!

Prabhas19 கிளாப் அடிச்சாச்சு!

SS.ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ், அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அனைத்து மொழி ரசிகர்களாலும் கவரப்பட்டு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவருகிறார்.உலகத்தையே தனது தனித்துவமான நடிப்பால் உற்று நோக்கவைத்த நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு, தனது அடுத்தப் படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார். 2013ம் வருடம் UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் - அனுஷ்கா நடிப்பில் மிர்ச்சி எனும் படம் வெளியாகி வசூல் வேட்டை செய்தது. தற்போது UVகிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோத் மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க சூஜித் சைன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் நடிகர் பிரபாஸ். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு சங்கர்-இசான்-லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் சாபு சிரில் இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இன்று பூஜையுடன் துவங்கிய #Prabhas19 படத்தை கிருஷ்னம் ராஜு கிளாப் போர்ட் தட்ட, தில் ராஜு கேமராவை ஆன்…
Read More
பாகுபலி தி கன்க்ளூஷன்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் ரிலீஸ் கன்ஃபார்ம்!

பாகுபலி தி கன்க்ளூஷன்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் ரிலீஸ் கன்ஃபார்ம்!

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள். உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், 'பாகுபலி 2' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'வில் விடை தெரியவிருக்கிறது. தற்போது 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வந்தது. நேற்று (ஜனவரி 6) 'பாகுபலி - தி கன்க்ளூஷன்' படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்தது படக்குழு. 2012ம் ஆண்டு…
Read More