27
Jun
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான ஆக்ஷன் அவதாரத்தை வெளிக்காட்டிய போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார். நேற்றைய அட்டகாசமான அறிவிப்பு போஸ்டரைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் தலைப்பும், ராஷ்மிகாவின் மிரட்டலான லுக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர். தெலுங்கில்: இயக்குநர் ஹனு ராகவபுடி தமிழில்: “குபேரா” படத்தில் நடித்த சக நடிகர் தனுஷ் இந்தியில்: “சாவா” பட நாயகன் விக்கி கௌஷல் மலையாளம் மற்றும் கன்னடத்தில்: துல்கர் சல்மான் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இந்த…