பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி !!

பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி !!

திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. "சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா" பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில், இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பத்திரிக்கை சந்திப்பு நிகழ்வினில்.... E Lounge Events சார்பில் வெங்கட் பேசியதாவது... இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 8ம் தேதி சென்னை YMCA நந்தனம் மைதானத்தில், இந்த லைவ் இன் கான்சர்ட் நடக்கவுள்ளது. இது இன்னிசை நிகழ்ச்சி அல்ல, நம் அனைவருக்கும் பிடித்த சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு விழா. 47 வருடங்களைக் கடந்து, உலகளவில் நம் அனைவரையும் அசத்தி வரும் அவரைக் கொண்டாடும் வகையில், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். எந்த ஒரு பாடலையும்…
Read More
“தருணம்” திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி,திரையரங்குகளில் வெளியாகிறது!!

“தருணம்” திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி,திரையரங்குகளில் வெளியாகிறது!!

ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது. தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார். வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர். ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, உலகமெங்கும் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாகிறது.
Read More
மலையாள ப்ளாக்பஸ்டர் “ஐடென்டிட்டி” உங்கள் ZEE5 தளத்தில் !!

மலையாள ப்ளாக்பஸ்டர் “ஐடென்டிட்டி” உங்கள் ZEE5 தளத்தில் !!

அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கத்தில், டோவினோ தாமஸ், த்ரிஷா கிருஷ்ணன், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி நடிப்பில், ஆக்‌ஷன் கலந்த உளவியல் திரில்லராக உருவாகியுள்ள படம் “ஐடென்டிட்டி”. இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, ஜனவரி 31, 2025 அன்று ZEE5 ஒரிஜினல் சைக்கலாஜிக்கல் த்ரில்லரான 'ஐடென்டிட்டி’ திரைப்படத்தினை, ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக ஸ்ட் ரீம் செய்யவுள்ளது. உளவியல் திரில்லராக ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் இப்படத்தினை, தொலைநோக்கு படைப்பாளிகளான அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கியுள்ளனர். பழிவாங்கலைச் சுற்றி, குற்றத்திற்கான நீதியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும்…
Read More
மோகன்லாலின்  “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!!

மோகன்லாலின் “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!!

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் “L2E எம்புரான்” திரைப்படம் மூலம், மலையாளத் திரையுலகில் கால் பதித்துள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் "தி கம்ப்ளீட் ஆக்டர்" மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். பெரும் வெற்றிப் படங்களான லூசிஃபர் மற்றும் ப்ரோ டாடிக்குப் பிறகு, இயக்குநர் மற்றும் நடிகராக அவர்களின் கூட்டணியில், உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2019 ல் வெளியான லூசிஃபர் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமாக, “L2E எம்புரான்” ஒரு பிரம்மாண்ட சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, நேற்று கொச்சியில் விமரிசையாக நடைபெற்றது, இந்நிகழ்வில் மெகாஸ்டார் மம்முட்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார், மேலும் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச்…
Read More
சசிகுமாரின்  ‘ மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

சசிகுமாரின் ‘ மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா - பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் - கன்னட திரைப்பட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி - தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி - மலையாள திரைப்பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- ஆகிய ஐந்து மொழி திரை ஆளுமைகள் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ' மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும்…
Read More
“தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” கார்டூன் ராமாயணம் !!

“தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” கார்டூன் ராமாயணம் !!

நம் பண்டைய கால புனித நூலான இராமாயணம் பல விதங்களில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் குழந்தைகளும் ரசிக்கும் வண்ணம் கார்டூன் பாணியில் உருவாகியிருக்கும் “தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா”. ராமனின் கதை நமக்கு புதிதல்ல அதனால படம் உருவாகியிருக்கும் விதம் தான் முக்கியம், நம் பாரம்பரியத்தை ஜப்பானிய கலை நுணுக்கத்தோடு உருவாக்கியுள்ளது இந்தப்படக்குழு. யுகோ சகோவால் உருவாக்கப்பட்டு & கொய்ச்சி சசாகி மற்றும் ராம் மோகன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், 450 இந்திய -ஜப்பானிய கலைஞர்கல் இணைந்து, கிட்டத்தட்ட 100,000 கையால் வரையப்பட்ட செல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய கலை நுணுக்கத்தை, இந்தியாவின் காலத்தைக் கடந்த கதைசொல்லலுடன் பாரம்பரியத்தை இணைத்து ஒரு காட்சி விருந்தாக உருவாக்கியுள்ளனர். படம் முழுக்க கார்டூன் வியந்து பாரக்கும் விஷுவல்கள் மற்றும் அதிர வைக்கும் போர் காட்சிகளை காட்டி விருந்து வைத்துள்ளது படக்குழு. ராமரின் பிறந்த இடமான அயோத்தியில் ஆரம்பித்து, மிதிலா, ராமர்…
Read More
பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன் !!

பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன் !!

  உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தை பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க .. மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவர்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறினார். அவருடைய இந்த தன்னிச்சையான முடிவிற்கு அங்கு கூடியிருந்த ரசிகர்களிடத்தில் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. அவரும்…
Read More
புதுச்சேரி பின்னணியில் தயாராகும் “மனிதம்” திரைப்படம் !!

புதுச்சேரி பின்னணியில் தயாராகும் “மனிதம்” திரைப்படம் !!

கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் 'மனிதம்' புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் 'மனிதம்' உண்மையான உறவு, நட்புகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது முன்னணி இயக்குநர்கள் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் 'மனிதம்' இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர் யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்கும் 'மனிதம்' திரைப்படத்தை ஜே புருனோ சாவியோ இயக்குகிறார். புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமான 'மனிதம்' படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. முன்னணி இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் இந்நிகழ்வில் பங்கேற்றனர். படத்தின் பாடல்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றன. திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும்…
Read More
நடிகர் மாதவன் நடிப்பில்,  ‘ஹிசாப் பராபர்’ ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது !!

நடிகர் மாதவன் நடிப்பில், ‘ஹிசாப் பராபர்’ ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது !!

முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் "சைத்தான்" பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஹிசாப் பராபரில், ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு சாதாரண மனிதனாக, மாதவன் நடித்துள்ளார். அஷ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை, ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினிகார்ப் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நீல் நிதின் முகேஷ் மற்றும் கிர்த்தி குல்ஹாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நையாண்டி பாணியில் சமூக அக்கறை மிக்க படைப்பாக, ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு சாதாரண ரயில்வே டிக்கெட் பரிசோதகரான ராதே மோகன் ஷர்மா (ஆர். மாதவன்),…
Read More
ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை, வெளியிட்டுள்ளது.

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை, வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தை, அதன் மையத்தை, நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான பாடலாக இந்த டைட்டில் டிராக் உருவாகியுள்ளது. ‘ஆஃபீஸ் பாட்டு’. கேட்கும் அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்து, அவர்களைத் திருப்தி அடையச் செய்யும் பாடலாக அமைந்துள்ளது. பெப்பி ஜானரில் உருவாகியுள்ள இப்பாடலை ஃப்ளுட் நவீன் இசையில், முகேஷ் பாடியுள்ளார். நகைச்சுவையுடன் கூடிய கலகலப்பான இந்த சீரிஸை, கபீஸ் இயக்கியுள்ளார், ஜெகன்நாத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸான ​​‘ஹார்ட் பீட்’ இல் தங்கள் நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ள இருவர் இடம்பெற்றுள்ளனர். ​​‘ஹார்ட் பீட்’ சீரிஸில் நடித்த நடிகர்கள் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் இந்த சீரிஸில் முக்கிய பாத்திரங்களில்…
Read More