என் மனைவி சொன்ன கதை: ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ இயக்குநர் ராம் கந்தசாமி!

என் மனைவி சொன்ன கதை: ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ இயக்குநர் ராம் கந்தசாமி!

குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். புஜ்ஜி திரைப்படத்தின் திரை வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா ஊடகங்கள் முன்னிலையில் இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ராம் கந்தசாமி பேசும்போது, "ஒரு படம் எடுக்க இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும். சிக்கனமாகப் பட்ஜெட்டில் படம் எடுப்பது என்றால் கூட 50 லட்சம் ஆகும் என்று பேசிக் கொண்டிருந்தோம்.ஒருநாள் சினிமா எடுப்பதைப் பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது என் மனைவி ஒரு விஷயத்தைக் கூறினார் கூறினார். எல்லாரும் நாயை , பூனையைச் செல்லமாக வளர்ப்பதைப் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால் ஆட்டை செல்லமாக வளர்ப்பது பற்றி யாரும் பேச மாட்டார்கள் . ஆனால் அவர் பேசினார். அவர்…
Read More
சமுத்திரக்கனி & சசிகுமார் உடன் நடிக்கணும்! கருடன் விழாவில் சிவகார்த்திகேயன்!

சமுத்திரக்கனி & சசிகுமார் உடன் நடிக்கணும்! கருடன் விழாவில் சிவகார்த்திகேயன்!

நடிகர்கள் சூரி - சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'கருடன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருடன்' திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரித்திருக்கிறார். மே 31 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த…
Read More
ரசிகர்களே இப்படி நடிகர்களைப் பின்பற்றாதீர்கள்! ‘கன்னி’ பட விழாவில் கே. ராஜன்!

ரசிகர்களே இப்படி நடிகர்களைப் பின்பற்றாதீர்கள்! ‘கன்னி’ பட விழாவில் கே. ராஜன்!

சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கன்னி'. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார் ,இசை செபாஸ்டியன் சதீஷ். மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின், வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் 96 படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார், கன்னி படத்தின் தயாரிப்பாளர் எம். செல்வராஜ், இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி,படத்தில் நடித்த அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் ,ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், இசையமைப்பாளர் செபாஸ்டியன் சதீஷ்,படத்தொகுப்பாளர் சாம், கலை இயக்குநர் சக்திவேல் மோகன்,கலரிஸ்ட் சி. சுருளி ராஜன்,மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்,தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார் ஆகியோர் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்து கொண்டு…
Read More
” குற்றம் புதிது ” படத்தின் பூஜையை விளக்கேற்றி துவங்கி வைத்தார் இயக்குனர் பாக்கியராஜ்!

” குற்றம் புதிது ” படத்தின் பூஜையை விளக்கேற்றி துவங்கி வைத்தார் இயக்குனர் பாக்கியராஜ்!

  GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் பிரமாண்டாமாக தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் காதநாயகனாக தருண் நடிக்கிறார்.செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்.மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள். ரஜித்,கிரிஷ் பாடல் வரி எழுத, ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் B கிருபா இசையமைக்கிறார் ,கமலக்கண்ணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். STORYBOARD சந்திரன், நடன இயக்குனர் வரதா,COSTUME DESIGNER கெசியா,COSTUMER சம்பத், MAKEUP ARTIST “AIRPORT” RAJA, பாடகர்கள் அனந்து,ரஜித்,STILL PHOTOGRAPHY S. SAKTHIPRIYAN,PUBLICITY DESIGNER DINESH KUMAR, இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன்,தயாரிப்பு மேலாளராய் ஆனந்த் பணியாற்றுகிறார். மேலும் இப்படத்தின் VISUAL EFFECTS பணிகளை WIREFRAME MEDIA நிறுவனம்…
Read More
7 முறை கதையைத் திருத்தினேன்!’ஹரா’ விழாவில் நடிகர் மோகன்!

7 முறை கதையைத் திருத்தினேன்!’ஹரா’ விழாவில் நடிகர் மோகன்!

தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும் தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவருமான நடிகர் மோகனின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரா' படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாகக் நடைபெற்றது. ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்டு நடிகர் மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் மோகன் தனது கையால் பல ஏழை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கு தேவையான பை, நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் பல ஏழைப் பெண்களுக்குத் தையல் மெஷின் முதலான உதவிப் பொருட்களை வழங்கினார்.கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ரசிகர்கள் மத்தியில் திரைப் பிரபலங்கள் முன்னிலையில்…
Read More
உரியடி விஜயகுமாரின் எலக்சன் பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

உரியடி விஜயகுமாரின் எலக்சன் பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் கலந்து கொண்டனர். . இந்த நிகழ்வில்,   நடிகை ரிச்சா ஜோஷி பேசுகையில்,'' இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறேன். இந்திய சினிமாவிற்கு பல நல்ல படைப்புகளை வழங்கிய தமிழ் திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமாகி, இந்த மேடையில் நிற்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் மொழி உச்சரிப்பில் உதவிய சக கலைஞரான விஜய் குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ''…
Read More
அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது! ஸ்டார் பட நாயகன் கவின்! !

அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது! ஸ்டார் பட நாயகன் கவின்! !

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் 'ராஜா ராணி' பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், இயக்குநர் இளன் பேசியதாவது, ' எனக்கு' மிகவும் எமோஷனலான தருணம் இது. நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும்... ஒரு…
Read More
இந்தத் திரைப்படம் பலரது கண்களை திறக்கும்! ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஜோதிகா!

இந்தத் திரைப்படம் பலரது கண்களை திறக்கும்! ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஜோதிகா!

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.‌ பார்வை திறன் சவாலுள்ள மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் சாக் இன் சீஸ்…
Read More
சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் பட டீஸரை வெளியிட்டார் பாலா!

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் பட டீஸரை வெளியிட்டார் பாலா!

  அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில் தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூரி கலந்து கொண்டனர்.   இந்த நிகழ்வில்   நடிகர் சூரி பேசியதாவது,   வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி இங்க ஹிட் ஆனது போல தெலுங்கில் பெரிய ஹிட். அந்த காமெடியை தன்ராஜ்தான் நடித்ததாக சொன்னார். அப்போதிலிருந்து அவர் என்னுடைய நம்பராக அறிமுகமானார்.   அப்பா மகன் உறவு தொடர்பான கதையம்சம் கொண்ட படங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இந்தப்படமும் கட்டாயம் வெற்றி பெரும். ஒரு படம் எடுப்பதை விட மக்களிடம் கொண்டு சேர்பதுதான் சிரமமாக இருக்கிறது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல நிறைய சிரமம் எடுத்துள்ளனர். கனி அண்ணன் நெகட்டிவாக பேசினதா நான் கேட்டதே இல்லை.. உங்கள் உழைப்பு…
Read More
தேஜா சஜ்ஜாவின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளது படக்குழு!

தேஜா சஜ்ஜாவின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளது படக்குழு!

சமீபத்தில் வெளியான ஹனுமன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனியுடன் இணையும் புதிய படத்தினை டோலிவுட்டின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி “புரடக்சன் நம்பர் 36”, ஆக பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. தயாரிப்பாளர் டிஜி விஸ்வ பிரசாத் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு போஸ்டரில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா முகத்தில் தீவிரமான முக பாவனையுடன் மிடுக்காக தோற்றமளிக்கிறார். அவரது முந்தைய படத்தில் பாரம்பரிய தோற்றத்தில் காட்சியளித்த தேஜா சஜ்ஜா முற்றிலும் புதிய ஸ்டைலான தோற்றத்திற்கு மாறி சூப்பர் யோதாவாக அசத்துகிறார். இப்படத்தின் தலைப்பு ஏப்ரல் 18ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஈகிள் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கார்த்திக் கட்டம்நேனி மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும், ஈகிள் படம் போலவே இப்படமும் புதிய வரலாறு படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு…
Read More