25
Apr
சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா ( Jolly Oh Gymkhana)வை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துவதன் மூலம் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது. இது சாதாரண ஒரு பேட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை அவர்களின் மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான தருணங்களில்.. முன் தயாரிப்பு ஏதுமின்றி உண்மையான மனிதர்களாக பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். இதில் கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கையான கேலி பேச்சுகளும் இடம்பெறுகின்றன. திரையில் இந்த நட்சத்திரங்களை ரசிக்கும் நீண்ட கால சன் டிவி ரசிகர்களுக்கும், இவர்களின் இதுவரை காணாத புதிய பரிணாமத்தைக்காண ஆவலுள்ள இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் ஏற்ற ஒரு நிகழ்ச்சியாக இது அமைகிறது. பிரபல ஸ்டாண்ட் அப் காமெடி ஆர்டிஸ்ட் ஆன ஜெகன் கிருஷ்ணன் தொகுத்து…
