‘டிக்:டிக்:டிக்’ டிரைலர் – நவம்பர் 24-ல் வெளியாகிறது!

ஜெயம் ரவி நடித்து வரும் ‘டிக்:டிக்:டிக்’ படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. ‘மிருதன்’ படத்துக்குப் பிறகு, சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் படம்தான் ‘டிக்:டிக்:டிக்’. தமிழ் சினிமாவில் முதல் முறையாக விண்வெளியில் நடக்கும் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.

முன்னதாக இப்படத்தின் நாயகன் ஜெயம் ரவி பற்றி குறிப்பிட்ட இயக்குநர், “படத்தில் முக்கால்வாசி நேரம் ரவி உடையோடு ஒரு கம்பி மாட்டப்பட்டிருக்கும். இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, அந்த விசேஷ உடைகளை கழட்டி மாட்ட ஒரு மணி நேரம் ஆகும். கம்பி ஒன்று இணைக்கப்பட்டிருப்பதால், அவரால் உட்கார முடியாது. எப்போதும் நின்று கொண்டே தான் இருக்க வேண்டும். படப்பிடிப்பு மிகவும் கடினமான இருந்தது.

சண்டைக் காட்சிகளை படம்பிடிக்க விசேஷ கருவிகளை இறக்குமதி செய்தோம். சண்டைக்காட்சிகளில் கயிறுகள் பயன்படுத்தும் போது, முன்னால், பின்னால், இடது, வலது என ஏதாவது ஒரு பக்கம் தான் நகர முடியும். இந்த கருவியால் 360டிகிரி கோணத்துக்கு எங்கும் நகரலாம். ஆனால் எங்கள் யாருக்கும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரியாது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என ஒரு வாரம் படத்தின் சண்டைப் பயிற்சியாளரும் அவரது குழுவும் பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். ரவிக்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என காட்ட நினைத்தோம். அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த அந்த கருவியை முயற்சித்துப் பார்க்க வேண்டும் என நினைத்தார். அவர் அதை பயன்படுத்த ஆரம்பித்து, லாவகமாக இருந்ததால், உடனே படப்பிடிப்புத் தயாராகி விட்டார். நாங்கள் அவருடன் ஒரு வாரம் இதற்காக செலவிடலாம் என நினைத்திருந்தோம். அவர் நன்றாக அதைக் கையாண்டார்” என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தில், ஜெயம் ரவியுடன் அவரது மகன் ஆரவ்வும் நடிக்கிறார். இது பற்றி குறிப்பிட்ட இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் அவர்கள் இருவரும் இருக்கும் காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சைத் தொடும் என்றும் சொல்லி இருந்தார்.

தற்போது இந்த ‘டிக்:டிக்:டிக்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முழுக்க விண்வெளியை மையப்படுத்தி வரும் த்ரில்லர் என்பதால் பல்வேறு இடங்களில் கிராபிக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இதன் ட்ரெய்லர் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

 

Related posts:

நமக்குத் தேவை ஆட்சி மாற்றம் இல்லை!"அறம் செய்" பட விழாவில் இயக்குனர் வைத்தியநாதன்!

June 28, 2024

சிவாஜி மணி மண்டப விழாவில் ஓ பி எஸ் , ரஜினி, கமல் பேச்சு முழு விபரம்!

October 1, 2017

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட அமைச்சர் செய்தித் துறை அமைச்...

November 9, 2023

விஜய் டிவி பிரபலமான நடிகர் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரி...

February 8, 2024

பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.

May 19, 2023

மனிதர்களின் இருண்ட பக்கத்தை காட்டும் ‘நிறங்கள் மூன்று’ - சரத்குமார் !!

November 18, 2024