மலையாளத்தில் பிரபல நடிகராக புகழ் பெற்றிருக்கும் ஜோஜு ஜார்ஜ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் பணி.
அவரும் நிறைய கொரிய படங்கள் பார்ப்பார் போல.. இந்தப்படம் அப்படியே அச்சு அசலாக ஒரு கொரியன் டார்க் ஆக்சன் திரில்லர் படம் பார்த்த உணர்வைத் தருகிறது. படம் முழுக்கவே கொரியன் பட ஸ்டைலில் அதே மாதிரி தான் எடுக்கப்பட்டிருக்கிறது.
திருச்சூர் பகுதியில் ஒரு பெரிய குடும்பம் அந்த ஏரியாவில் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் குடும்பம், ஐந்து பேர் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள், உறவாகி ஒன்றாக வாழ்கிறார்கள். கிட்டதட்ட டான் குடும்பம்.
அப்படிபட்ட ஜோஜு ஜார்ஜிடம் புதிதாக முளைத்த இரண்டு சைக்கோ இளைஞர்கள் தெரிந்தே கை வைத்து விட்டு? ஓடிப்போய் விடுகிறார்கள்.
ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் ஜோஜு குடும்பம் என, அவர்களைத் தேடுகிறது.
இன்னொரு பக்கம் சைக்கோ இளைஞர்களின் கொட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது. எப்போதடா ஹீரோ கையில் சிக்குவார்கள் என நம்மை நினைக்க வைத்ததில் தான் படம் வெற்றி அடைந்து விடுகிறது.
மிக சிம்பிளான கதை, அதை சிறுக சிறுக சுவாரஸ்யம் கூட்டி ஒரு அட்டகாசமான கமர்ஷியல் மசாலாவாக தந்துள்ளனர்.
ஜோஜு ஜார்ஜ் கண்டிப்பாக முதல் படம் இயக்கியது போல தெரியவில்லை, கச்சிதமாக காட்சிகளை அடுக்கி க்ளைமாக்ஸுக்கு கூட்டிச் செல்கிறார். செம்ம இண்டன்ஸான மேக்கிங்.
மலையளா படங்களுக்கு நிலவியல் மிகப்பெரிய பலம். அந்த நிலம் அத்தனை அழகாக காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. அவர்கள் காட்சிகள் தரும் லைவ்வான உணர்வு இன்னொரு பலம்.
ஒவ்வொரு நடிகர்களும் அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். அபிநயாவிற்கு பெயர் சொல்லும் பாத்திரம். மிக தைரியமாக அதை ஏற்று நடித்திருக்கிறார். வில்லன்களாக வரும் அந்த இரண்டு இளைஞர்கள் மிரட்டி விட்டார்கள்.
இரவில் தான் பல காட்சிகள் வருகிறது கேமரா விளையாடியிருக்கிறது. அந்த கார் சேஸிங் காட்சி எல்லாம் அத்தனை மிரட்டலாக இருந்தது. இசை சாம் சிஸ் செதுக்கியிருக்கிறார்.
தமிழில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே மறந்து போய் விடுகிறது. அத்தனை கச்சிதமாக தமிழ் படுத்தியிருந்தார்கள்.
கேரளாவில் 5 வாரங்கள் கடந்து பம்பர் ஹிட்டாகிவிட்டது. இப்போது தமிழில் வந்துள்ளது.
மூவி லவ்வர்ஸுக்கு Treat மிஸ் செய்து விடாதீர்கள்.