23
Nov
மலையாளத்தில் பிரபல நடிகராக புகழ் பெற்றிருக்கும் ஜோஜு ஜார்ஜ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் பணி. அவரும் நிறைய கொரிய படங்கள் பார்ப்பார் போல.. இந்தப்படம் அப்படியே அச்சு அசலாக ஒரு கொரியன் டார்க் ஆக்சன் திரில்லர் படம் பார்த்த உணர்வைத் தருகிறது. படம் முழுக்கவே கொரியன் பட ஸ்டைலில் அதே மாதிரி தான் எடுக்கப்பட்டிருக்கிறது. திருச்சூர் பகுதியில் ஒரு பெரிய குடும்பம் அந்த ஏரியாவில் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் குடும்பம், ஐந்து பேர் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள், உறவாகி ஒன்றாக வாழ்கிறார்கள். கிட்டதட்ட டான் குடும்பம். அப்படிபட்ட ஜோஜு ஜார்ஜிடம் புதிதாக முளைத்த இரண்டு சைக்கோ இளைஞர்கள் தெரிந்தே கை வைத்து விட்டு? ஓடிப்போய் விடுகிறார்கள். ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் ஜோஜு குடும்பம் என, அவர்களைத் தேடுகிறது. இன்னொரு பக்கம் சைக்கோ இளைஞர்களின் கொட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது. எப்போதடா ஹீரோ கையில் சிக்குவார்கள் என…
