தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியல் பற்றியும் அவர்களின் வலி பற்றியும் விவரிக்கும் படம் தான் இந்த ஜமா. வன்முறை படங்களுக்கு மத்தியில் எதார்த்தத்தின் உருவமாக வெளிவந்துள்ள இப்படத்தின் விமர்சனம் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
திருவண்ணாமலையில் தெருக்கூத்து நடத்தி வரும் சேத்தன் குரூப்பில் ஹீரோ பெண் வேஷம் கட்டுபவராக இருக்கிறார். மகாபாரத திரௌபதியாக நடிக்கும் ஹீரோவுக்கு தொடர்ந்து அந்த கதாபாத்திரங்கள் தான் கிடைக்கிறது. ஆனால் அதையும் சந்தோஷமாக ஏற்று நடித்து வருகிறார்.
இது அவருடைய திருமணத்திற்கு பிரச்சினையாக வந்து நிற்கிறது. அதாவது பெண் வேடம் போடுவது பெண்களுடன் பழகுவது என இருப்பதால் ஹீரோவின் நடவடிக்கையில் பெண் சாயல் வருகிறது. அதனால் அர்ஜுனன் வேஷத்தில் நடிக்க சொல்லி அவரின் அம்மா வற்புறுத்துகிறார்.
அதை அடுத்து ஹீரோ சேத்தனிடம் இதைப் பற்றி தொடர்ந்து கேட்டு வருகிறார். ஆனால் அவமானம் தான் மிஞ்சுகிறது. பிறகு ஹீரோ அர்ஜுனன் வேஷம் போட்டாரா? அவருக்கு திருமணம் நடந்ததா? ஜமாவின் பின்னணி என்ன? என்பது தான் இந்தப்படம்.
சினிமாவில் தெருக்கூத்து பெரிதாக பதிவானதில்லை, நாசரின் அவதாரம், வசந்தபாலனி திரைப்படம், என் அங்கங்கே சிறு சிறு படைப்புகள் கொஞ்சம் காட்டியிருக்கிறது. இப்படம் மண்மனத்தோடு தெருக்கூத்தை ரத்தமும் சதையுமாக காட்டி இருக்கிறது
மண்ணின் பின்னால், மக்களின் பின்னால், அவர்களின் பழக்க வழக்கங்களை தத்ரூபமாக காட்டி, ஒரு அழுத்தமான கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாரின் இளவழகன்
கதை கதை நடக்கும் இடம் தெருக்கூத்து கலைஞர் அவர்களின் வாழ்வியல் எல்லாமே தமிழ் சினிமாவுக்கு புதிதானது. படகுழுவுக்கு வாழ்த்துக்கள்.
நடிகர்கள் ஒவ்வொருவரும் நடிப்பும் அற்புதமாக வந்திருக்கிறது அதிலும் பெண்வேடம் தரிக்கும் பாரி, மனதை கொள்ளை கொள்கிறார். அவரது ஒவ்வொரு தவிப்பும் நமக்கும் பதிகிறது. தெருக்கூத்து கலைஞர்கள் ஒவ்வொருவருமே சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
நடிகர் சேத்தனுக்கு வில்லத்தனத்தில் மட்டுமல்ல இறுதியில் அவர் ஆடும் கர்ணன் ஆட்டம் அபாரம், இப்படம் அவருக்கு ஒரு மைல்கல். அம்மு அபிராமி சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார்.
இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. பல இடங்களில் பின்னணி இசை சிலிர்க்க வைக்கிறது.
படத்தில் சிற்சில குறைகள் இருந்தாலும் அது பெரிதாக படத்தை பாதிக்கவில்லை. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படைப்பாக மிளிர்கிறது இந்த ஜமா