தெருக்கூத்து கலையை கௌரவிக்கும் ஜமா !!

தெருக்கூத்து கலையை கௌரவிக்கும் ஜமா !!

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியல் பற்றியும் அவர்களின் வலி பற்றியும் விவரிக்கும் படம் தான் இந்த ஜமா. வன்முறை படங்களுக்கு மத்தியில் எதார்த்தத்தின் உருவமாக வெளிவந்துள்ள இப்படத்தின் விமர்சனம் பற்றி இங்கு விரிவாக காண்போம். திருவண்ணாமலையில் தெருக்கூத்து நடத்தி வரும் சேத்தன் குரூப்பில் ஹீரோ பெண் வேஷம் கட்டுபவராக இருக்கிறார். மகாபாரத திரௌபதியாக நடிக்கும் ஹீரோவுக்கு தொடர்ந்து அந்த கதாபாத்திரங்கள் தான் கிடைக்கிறது. ஆனால் அதையும் சந்தோஷமாக ஏற்று நடித்து வருகிறார். இது அவருடைய திருமணத்திற்கு பிரச்சினையாக வந்து நிற்கிறது. அதாவது பெண் வேடம் போடுவது பெண்களுடன் பழகுவது என இருப்பதால் ஹீரோவின் நடவடிக்கையில் பெண் சாயல் வருகிறது. அதனால் அர்ஜுனன் வேஷத்தில் நடிக்க சொல்லி அவரின் அம்மா வற்புறுத்துகிறார். அதை அடுத்து ஹீரோ சேத்தனிடம் இதைப் பற்றி தொடர்ந்து கேட்டு வருகிறார். ஆனால் அவமானம் தான் மிஞ்சுகிறது. பிறகு ஹீரோ அர்ஜுனன் வேஷம் போட்டாரா? அவருக்கு திருமணம் நடந்ததா? ஜமாவின் பின்னணி…
Read More
error: Content is protected !!