எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரை விமர்சனம் !!

கால்பந்தாட்ட விளையாட்டில் சாதிக்க முயலும் ஏழை குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் திறமை இருந்தும் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்

இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா இயக்கியுள்ளார்
நாயகன் சரத், நாயகி அய்ரா

பெரிய கால்பந்தாட்ட வீரராக இருந்த மதன் தக்‌ஷிணா மூர்த்திக்கு ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு ஒழுக்காக நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவர் தன் கனவை நிறைவேற்ற ஏழை இளைஞர்களுக்கு கோச்சிங் தருகிறார். அதில் நாயகனும் ஒருவர். அவர் நாயகி அய்ராவை காதலிக்கிறார். இதனால் அவர் கவனம் தடுமாறுகிறது.

குழு இளைஞர்கள் நன்றாக விளையாட
கால்பந்து கமிட்டியில் இவர்களில் சிலரை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் வில்லன் கீழ்மட்டத்தில் இளைஞர்கள் எப்படி மேலே வரலாம் என அவர்களை தேர்ந்தெடுக்கவிடாமல் தடுத்துவிடுகிறார். அதன் பின் அவர்கள் ஜெயித்தார்களா என்பதே படம்.

கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலி தொழிலாளர்களின் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் திறமை இருந்தும் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பது தான் படம்

ஒரு நல்ல கருத்தை படமாக்க துணிந்தது நன்று ஆனால் அதை எடுத்த விதம் தான் பயங்கர சொதப்பல், படம் முழுக்க லாஜிக் ஓட்டைகள், சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதை, கண்டினியூ இல்லாத காட்சிகள் என படம் நம்மை சோதிக்கிறது.

நாயகனுக்கு சுத்தமாக நடிப்பே வரவில்லை, எல்லாவற்றுக்கும் ஒரே எக்ஸ்பிரசன் தான். நாயகிக்கு ஒரு சில காட்சிகள் தான். வில்லன், துணை நடிகர்கள் சொல்லிக்கொடுத்ததை செய்துள்ளனர்.

குறைந்த பட்ஜெட் என்பது விஷிவலில் நன்றாக தெரிகிறது இசையும் பலன் தரவில்லை. படம் எந்த வகையிலும் ஈர்க்கவில்லை. ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்து சொதப்பியிருக்கிறார்கள்.