Latest Posts

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய படம் மட்டி!

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப் பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ்...

அன்பிற்கினியாள் பட பிரிமீயர் ஷோ அப்டேட் நியூஸ்!

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண் பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம்...

இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்!

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து...

ஷூட்டிங் நடத்தப் போறீங்களா? – அப்ப முதல்ல இதைப் படிங்க!

தமிழகத்தில் சினிமா, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பது :-

“சினிமா படப்பிடிப்பு, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பு, இணையத்தள தொடர் படப்பிடிப்பு போன்ற அனைத்துவித ஊடக தயாரிப்புகளின்போது கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு ஆணையாக வெளியிடுகிறது.

கட்டுப்பாட்டு பகுதிக்குள் எந்தவித ஊடக தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை. அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களையும் அனைத்து ஊடக தயாரிப்பு யூனிட்டுகளும் பின்பற்ற வேண்டும்.

ஒரு பகுதியில் ஒரு நேரத்தில் மேற்கொள்ளப்படும் சினிமா படப்பிடிப்புக்கு 75 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பணியாளர் யாரும் ஊடக தயாரிப்பு பணிக்கு வரக் கூடாது.

வயதானவர்கள், கர்ப்பிணிகள், மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்கள் போன்ற பணியாளர்கள் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புக்கு வராத அளவில் முன் களமற்ற இடங்களில் பணியாற்ற வேண்டும்.

அனைவரும் முக கவசத்துடன் இருக்க வேண்டும்.

இருமல், தும்மலின்போது கண்டிப்பாக கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும்.

கை கழுவுதல், சானிடைசரை பயன்படுத்துவது போன்றவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும். அனைத்து பணி தளங்களின் நுழைவு வாயில்களிலும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். அங்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

அனைவருமே ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

லிப்ட்களில் ஏறிச் செல்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும்.

பணித் தளம், கழிவறை, சிற்றுண்டி பகுதி, செட்கள், எடிட் அறை, வேனிட்டி வேன் போன்றவற்றை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

உபயோகப்படுத்தப்பட்ட முக கவசம், கையுறை, துண்டுகளை அப்புறப்படுத்த வேண்டுமானால், மூடப்பட்ட குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

ஏ.சி. குளிரை 24 முதல் 30 டிகிரிவரை வைத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம்வரை இருக்கலாம். 50 சதவீதத்துக்கு மேல் வெளிக்காற்று வரும் வகையில் பணித் தளம் இருக்க வேண்டும்.

யாருக்காவது தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்தால் அவரை தனிமைப்படுத்தும் வசதி இருக்க வேண்டும். அது பற்றி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

யாருக்காவது கொரோனா தொற்று உறுதியாகத் தெரிந்தால், அந்த வளாகம் முழுவதையும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.

கேமரா வைக்கும் இடம், உணவு பரிமாறும் இடம், காட்சிகள் எடுக்கும் இடம், இருக்கைகள் போடும் இடம் ஆகிய ஒவ்வொரு இடத்திலும் சமூக இடைவெளி விடுவதற்கான மேலாண்மையுடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

பார்வையாளர்களுக்கு இருக்கைகள் தரக் கூடாது.

படப்பிடிப்பின்போது நடிகர்கள், படப்பிடிப்பில் ஈடுபடுவோர் குறைந்த எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

ஸ்டூடியோக்களில் வெவ்வேறு யூனிட்களுக்கு வெவ்வேறு நேரத்தில் படப்பிடிப்பு, பேக்-அப் அறிவிக்கப்பட வேண்டும்.

கேமரா முன் நிற்கும்போது நடிப்பவர்கள் தவிர மற்றவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.

விக் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களை பரிமாறிக் கொள்வதை குறைக்க வேண்டும்.

மேக்-அப் கலைஞர்கள், முடி திருத்துவோர் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.

படப்பிடிப்பு குழுவினரில் ஒருவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். அவர், படப்பிடிப்பு நடைபெறும் இடம் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வருகிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் அனைவரும் பதிவிறக்கம் செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நடிகர், படப்பிடிப்பு குழுவினருக்கும் உள்ள மருத்துவ பதிவுகளையும், பயண விவரங்களையும் குறித்து வைக்க வேண்டும்..

Latest Posts

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய படம் மட்டி!

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப் பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ்...

அன்பிற்கினியாள் பட பிரிமீயர் ஷோ அப்டேட் நியூஸ்!

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண் பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம்...

இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்!

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து...

Don't Miss

பாலுமகேந்திரா – மறக்க முடியாத படைப்பாளி!

இலங்கையில் பிறந்தவருக்கு இயக்குநர்கள் டேவிட் லீன், சத்யஜித்ரே ஆகியோர்தான் மானசீக குரு. இருந்தாலும் போட்டோகிராபியே முதல்காதல் என்பதால் பயணம் அப்படி துவங்கியது.. எழுபதுகளின் துவக்கத்தில் மலையாள படங்களை ஒளிப்பதிவு செய்தவருக்கு, மிகப்பெரிய அளவில்...

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்!

ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகிய வற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத்...

டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’?

டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் 'நீ சுடத்தான் வந்தியா?' .காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்...

காமத்தை மையமாக்கி உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் -“SSHHH”!

காமத்தை மையமாக வைத்து உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH”, தமிழில் முதல் முறையாக மாறுப்பட்ட கோணத்தில் உருவாகும் ஆந்தாலஜி திரைப் படமான “SSHHH” படத்தின், சமீபத்திய அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் ஆவலை...

Lyca வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” பட படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சிவாகர்த்திகேயன் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகும் “டான்” படத்தின் படப்பிடிப்பு இன்று 2021 பிப்ரவரி 11 கோயம்புத்தூரில் துவங்கியது. படத்தின் அனைத்து நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் இதில் பங்கு கொண்டனர்....

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.