கொலைகாரன் டீம் உங்களுக்கு துப்பறியும் வாய்ப்பை வழங்குகிறது!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும், பாப்டா திரைப்பட பயிற்சி மையத்தின் நிறுவனருமான தனஞ்செயன் தன் நிறுவனம் சார்பில் ’இறுதிச் சுற்று’, ‘அஞ்சான்’, ‘புறம்போக்கு’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல படங்களில் இணை தயாரிப்பாளராக பணியாற்றி யிருப்பதோடு, ‘மிஸ்டர்.சந்திரமெளலி’ மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார். மேலும், ’இவன் தந்திரன்’, ‘யு டர்ன்’, ‘ஜீரோ’ ஆகிய படங் களை விநியோகமும் செய்திருக்கிறார். அந்த வரிசையில் தற்போது கொலைகாரன் என்னும் படத்தை ரிலீஸ் செய்கிறார்.

இந்த கொலைகாரன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, மற்றும் அர்ஜூன் இணைந்து நடித்து இருக்கிறார்கள். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு நகரில் அடுத்தடுத்து கொடூரமான கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜுன் விசாரிக்கிறார். விஜய் ஆண்டனி தான் அந்த சைக்கோ கொலைகாரன் என்பது தெரிய வருகிறது. ஆனால் அந்த காரணம் என்ன? என்பதே கதை. க்ரைம் திரில்லரான இது ஹாலிவுட் படத்துக்கு சவால் விடும் வகையில் உருவாகி இருக்கிறது.

வரும் மே மாதம் இந்தப் படத்தை பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் வெளியிடவிருக்கிறார். இதையொட்டி நம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு கொலைகாரன் படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான போட்டியை பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அது என்னவென்றால் இந்தக் ‘கொலைகாரன்’ படத்தில், படத்தின் நாயகனான விஜய் ஆண்டனி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். அவ்வளவுதான்.

இதற்கான வழிமுறைகள் இதோ :

இன்று முதல் ஏப்ரல் 24-ம் தேதி வரையிலும் தினமும் ஒரு நாளைக்கு ‘கொலைகாரன்’ படத்தின் ஒரு போஸ்டர் என்று மொத்தம் 6 போஸ்டர்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியிடப்படும்.

வெளியாகும் ஆறு போஸ்டர்களிலும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் பற்றிய துப்புகள் இருக்கும்.

ஆறாவது நாளின் முடிவில் எல்லா போஸ்டர்களிலும் இருக்கும் துப்புக்களை ஒருங்கிணைத்தால், அந்தக் கொலைகாரனின் உண்மைப் பெயரை கண்டறிய முடியும்.

அப்படி அந்தப் பெயரை சரியாகக் கண்டுபிடித்துச் சொல்பவர்களில் 4 பேருக்கு FASTTRACK கை கடிகாரம் பரிசாக வழங்கப்படும்.

மேலும், சரியான விடையைக் கண்டுபிடிக்கும் 100 ரசிகர்களுக்கு ‘கொலைகாரன்’ படத்தின் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுக்கள் வழங்கப்படும்.

இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

போட்டிக்கான பதில்களை[email protected]என்ற இணைய முகவரிக்கு ஏப்ரல் 25-ம் தேதிக்குள்ளாக அனுப்ப வேண்டும்.

பரிசு பெறுபவர்களின் விபரம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும்.

ஒரு போட்டியாளருக்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.

நீங்கள் எழுதியனுப்ப வேண்டியது :

கொலைகாரனின் கதாபாத்திரத்தின் பெயர்.

மற்றும்

உங்களது பெயர், வயது மற்றும் கைப்பேசி எண்.

என்ன தயாரா ரசிகர்களே..!