ஹன்சிகா-வின் மகா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிஞ்சுடுச்சுங்கோ!

0
264

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகா’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைப் பெற்றது. ‘Magnetizing, Alluring, Hidden & Aggressive’ ஆகியவை இந்த ‘MAHA’ படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிப்பவை. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் ஹன்சிகா மோத்வானி யின் ஸ்டில்ஸுக்கு பொருத்தமாகவும் இவை அமைந்திருக்கின்றன. அந்தப் போஸ்டரில் நடிகை ஹன்சிகா மோத்வானி காவி உடையில் கஞ்சா புகைப்பதுபோல போஸ் கொடுத்திருந்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்கூட ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படம் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் வி.மதியழகன், “இந்த ‘மகா’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிக களை யும் கவரும் அம்சங்களை கொண்ட ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படம். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்திற்காக மிகக் கடுமையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனது குழுவினரை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு தயாரிப்பாளரை ஊக்கப்படுத்தும் முதல் விஷயமே, படக் குழுவினர் சொன்ன தேதிக்குள் படத்தை முடித்துக் கொடுப்பதுதான். இயக்குநர் ஜமீல், ஹன்சிகா மோத்வானி, ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் மற்றும் குழுவில் உள்ள அனைவரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கண்டு நான் பெரிதும் வியக்கிறேன்.

வழக்கமாக சினிமாவில், திறமையான கலைஞர்களை ‘இயக்குநரின் நடிகர்’, ‘தயாரிப்பாளரின் இயக்குநர்’ என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் நான் தொடர்ந்து பெரும் பொறுப்புடன் செயல்படும் ஒரு தயாரிப்பாளரின் குழுவைக் வைத்திருக்கிறேன் என்றே கருதுகிறேன். இது எனக்கு ஒரு நேர்மறையான உணர்வைத் தருகிறது. இப்போதே எனக்கு படத்தின் தரம் கண் முன்னால் தெரிந்துவிட்டது..” என்றார்.

இதே நேரத்தில் தயாரிப்பாளர் வி.மதியழகன் நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’, அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ போன்ற தரமான படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.