ஏப்ரல் மாதம் 18 ம் தேதி திரைக்கு வரப் போகும் ‘காஞ்சனா 3’

கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் -என்று கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்.. அந்த வகையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியான படம் `முனி’. அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா’ வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2′ படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், `காஞ்சனா’ படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா ஆகியோர் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு பாடல் மட்டும் காட்சி படுத்தாமல் இருக்கிறார்கள்.

அதனால் மீத வேலைகள் ஜரூராக முடித்து ஏப்ரல் மாதம் 18 ம் தேதி திரைக்கு வர திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

error: Content is protected !!