சென்னையைச் சேர்ந்த பிரபல.நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்லி விழிப்புணர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ரமணி. உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காக தீவிரமான ஆராய்ச்சி செய்து ஒளடதம் கதையை எழுதியிருக்கிறார்கள் என்பது குறிப்புடத்தக்கது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் இந்தப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். சிங்கப்பூர் கலைவேந்தன், தமிழமுதன், சோ.சிவாகுமார் பிள்ளை, விஜயகிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தஷி இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட குரங்குபொம்மை இயக்குநர் நித்திலன் பெற்றுக்கொண்டார்.விழாவில் கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் ஸ்ரீராம், கே.வி.குணசேகர், மக்கள் தொடர்பாளர் சங்க பொருளாளர் விஜயமுரளி,பெருதுளசிபழனிவேல்,
