பைரசியை எதிர்த்து ”ஹீரோ டாக்கீஸ்”நடத்தும் 24மணி நேர இடைவிடாத நேரலை பிரச்சாரம் !!!

0
339

குடு குடு கிழவனுக்கும் அதிகமான வயதை கடந்து விட்டாலும், இன்றளவும் யூத்தாக இருப்பது நம்ம சினிமா என்று சொன்னால் அது மிகையல்ல. பேச்சு வராத குட்டீஸ் தொடங்கி பேசப் பிரியப் படாத முதியோர்கள் வரை வயசு வேறுபாடு இல்லாமல் சகலரையும் திருப்திப் படுத்த முயல்வது நம்ம சினிமாதான். இது மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு சக வயதினரின் வாழ்க்கை உற்சாகம், அழுகை, வலி, -இப்படியான பல்வேறு உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்துவது சினிமா-தான். அதாவ்து பல்வேறு ரசனைகள் கொண்ட கலவையான மனிதர்கள் ஒன்று கூடும் பூங்கா-இந்த சினிமா. பல கோடி செலவில் தயாராகும் இப்போதைய சினிமா ரசிகனுக்கு ஆறுதல் தந்து மகிழ்வித்தாலும் அந்த சாம்ராஜ்யம் தற்போது சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானது பைரசி-தான் என்றால் மிகையல்ல.

இதையொட்டி வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பெரும் சேவை செய்யும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவையான ”ஹீரோ டாக்கீஸ்”, ‘ஷூட் தி பைரேட்ஸ்’ என்ற 24 மணி நேரம் இடை விடாத, பைரஸிக்கு எதிரான பிரச்சாரத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி காலை பதினோரு மணிக்கு பிரசாத் லேபிள் தொடங்கவுள்ளனர்.இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த பிரச்சாரத்தில் தலைப்புகளில் பேச்சு, கலந்துரையாடல்கள், விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள் ஆகியவை சினிமா பிரபலங்களோடும், பிரபலங்கள் தலைமையிலும் நடத்தப்பவுள்ளது. இந்த ”ஷூட் தி பைரேட்ஸ்” நிகழ்வு ”Asia Book Of Records” மற்றும் ” Indian Book Of Records” ஆகியவையால் ”Longest Anti Piracy Campaign” என அடையாளம் காணப்படவுள்ளது. இதில் திரைப்படங்களைக் குடும்பத்துடன் திரையரங்குக்குச் சென்று கண்டுகளிக்க முடியாதபடி திரையரங்கங்களின் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது. அட, எண்டரன்ஸ் அமெளண்ட் இப்படி என்றால், பார்க்கிங் கட்டணம், கேன்டீனில் பாப்கார்ன் உள்ளிட்ட சிற்றுணவுக்கான கட்டணங்கள் என்று எல்லாமே ஆர்டினரி மனிதன் மனைவி, குழந்தைகளுடன் சென்று ரசிக்க முடியாத அளவில் எக்கச்சக்கமான மடங்கு உயர்வாக இருக்கிறது. அது மட்டுமா? புதிய திரைப்படங்கள் வெளியாகும் நேரத்தில் கவுன்ட்டரில்/ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்கப்படுவது குறைந்து பிளாக்கில் அதிக பணம் கொடுத்தால் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளதையெல்லாம் ஓப்பன் டிஸ்கஷனில் பேச ஓர் வாய்ப்பு உருவாகி உள்ளது..

இந்த புதிய காம்பைனில் பல சினிமா சாதனையாளர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த ”ஷூட் தி பைரேட்ஸ்” நிகழ்வை ‘மீசைய முறுக்கு” புகழ் RJ விக்னேஷ் தொகுத்து வழங்கவுள்ளார். சிம்பிளாக சொல்வதானால் ஒரு படம் எடுக்க சந்தித்தாக வேண்டிய சிரமங்கள், தமிழ் சினிமாவை எந்த அளவிற்கு பைரசி பாதிக்கின்றது, தயாரிப்பாளர் மற்றும் நுகர்வோர் கண்ணோட்டத்தில் சினிமா வணிகம் எப்படியுள்ளது,பைரசியை தடுக்க தேவையான நடவடிக்கைகள், தமிழ் சினிமாவின் தற்போதய ட்ரெண்ட்டுகள் மற்றும் தமிழ் சினிமா துறையின் டிஜிட்டல் பரிமாணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதங்களும், கலந்துரையாடல்களும், ஆய்வுகளும் நடத்தப்படவுள்ளன.