14
Sep
குடு குடு கிழவனுக்கும் அதிகமான வயதை கடந்து விட்டாலும், இன்றளவும் யூத்தாக இருப்பது நம்ம சினிமா என்று சொன்னால் அது மிகையல்ல. பேச்சு வராத குட்டீஸ் தொடங்கி பேசப் பிரியப் படாத முதியோர்கள் வரை வயசு வேறுபாடு இல்லாமல் சகலரையும் திருப்திப் படுத்த முயல்வது நம்ம சினிமாதான். இது மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு சக வயதினரின் வாழ்க்கை உற்சாகம், அழுகை, வலி, -இப்படியான பல்வேறு உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்துவது சினிமா-தான். அதாவ்து பல்வேறு ரசனைகள் கொண்ட கலவையான மனிதர்கள் ஒன்று கூடும் பூங்கா-இந்த சினிமா. பல கோடி செலவில் தயாராகும் இப்போதைய சினிமா ரசிகனுக்கு ஆறுதல் தந்து மகிழ்வித்தாலும் அந்த சாம்ராஜ்யம் தற்போது சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானது பைரசி-தான் என்றால் மிகையல்ல. இதையொட்டி வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பெரும் சேவை செய்யும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவையான ''ஹீரோ டாக்கீஸ்'', 'ஷூட் தி பைரேட்ஸ்' என்ற 24 மணி நேரம் இடை…