30
Aug
இந்திய மொழிகளில் ஒரு படம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்கு முறை எடுக்கப்பட்டு அத்தனையும் ஹிட் அடித்தது என்றால் அது 1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு படம் மட்டும்தான். இந்தப்படத்தில் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் வழக்கத்திற்கு மாறான மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி. சொல்லப்போனால் மம்முட்டியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு தமிழ்சினிமாவிலும் ஒரு இடத்தைப் பிடித்துக் கொடுத்தது இந்தப்படம்தான். இதன் அடுத்த தொடரான ஜகார்த்தா 1989ல் வெளியானது. அதன்பிறகு இதன் அடுத்தடுத்த பாகங்களாக 2004ல் சேதுராமையர் சி.பி.ஐயும் 2005ல் நேரறியான் சி.பி.ஐயும் வெளியாகின. ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொருவிதமான வழக்கை டீல் செய்வார் மம்முட்டி இதன் ஒவ்வொரு பாகங்களிலும் மம்முட்டியின் சேதுராமையர் காதாபாத்திரமும் மாறவில்லை. அவரது கெட்டப்பும் முதல் படத்தில் பார்த்த்துபோலவே தொடர்ந்தது இந்த நான்கு படங்களுக்குமே பல ஆச்சரியமான ஒற்றுமைகள் உண்டு. இந்த நான்கு படங்களின் கதையையும் எழுதியவர் பிரபல…