27
Aug
அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றித்திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது. ஜீ5 தளத்தின் லேட்டஸ்ட் வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்க்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. சென்னை (26-08-2022):* கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில் திரையிடப்பட்ட, நடிகர் அருண் விஜய் நடித்த “யானை” திரைப்படம், குறுகிய காலத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து ஒரு அற்புதமான சாதனையைப் படைத்துள்ளது. இத்திரைப்படம், திரையரங்கில் வெளியான போதே விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பலத்த பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடதக்கது. இப்போது ஓடிடி பிரீமியரில் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாசம், ஆக்சன், செண்டிமெண்ட், காதல் மற்றும் குடும்பப் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்…