என் கதையை திருடி வெப்சீரிஸாக இயக்கிட்டார் வெங்கட்பிரபு” ; இயக்குனர் சசிதரன் குற்றச்சாட்டு!

என் கதையை திருடி வெப்சீரிஸாக இயக்கிட்டார் வெங்கட்பிரபு” ; இயக்குனர் சசிதரன் குற்றச்சாட்டு!

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இதனை வெங்கட்பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் இயக்குனர் சசிதரன். இவர் அட்டகத்தி தினேஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் 'வாராயோ வெண்ணிலாவே' என்கிற படத்தை இயக்கி முடித்து..தற்போது bigboss புகழ் ஆரி அர்ஜுன் நுடன் புதிய படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார். தன்னுடைய கதையான வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'லைவ் டெலிகாஸ்ட்' சீரிஸ் கதை உருவான விதம் குறித்தும் இயக்குனர் வெங்கட்பிரபு குறித்தும் இயக்குனர் சசிதரன் கூறியதாவது,.. “2005 காலகட்டத்தில் வெங்கட்பிரபுவும் நானும் நண்பர்களாக இருந்தோம். அந்தசமயத்தில் அவர் நடித்திருந்த ‘உன்னை சரணடைந்தேன்’ என்கிற…
Read More
“MOVIEWUD” மூவி ஆப் – தொடங்கி வைத்த இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர்..!

“MOVIEWUD” மூவி ஆப் – தொடங்கி வைத்த இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர்..!

இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன் இருவரும் "மூவி உட்" ஆப்பின் வெப்சைட் மற்றும் ஆண்டிராய்ட், ஆப்பிள் ஆப்களை வெளியிட்டார்கள். இந்த Moviewud ஆப்-பில் சிறு முதலீட்டு படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள், வெப் சீரீஸ்கள் என மற்ற ஆப் களை போன்றே அனைத்தும் இடம்பெறும். மேலும்  OTT தளங்களில் முதல் முறையாய் மேடை நாடகங்களை இத்தலைமுறை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். சிறு முதலீட்டுப் படங்கள், சுயாதீன திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒர் தளமாய் உருவாகியுள்ளார்கள். மிக முக்கியமாய் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் பார்வையாளர்கள் மற்றும் வருமானத்தை பார்த்து தெரிந்து கொள்ள அவர்களுக்கு. தனி டேஷ்போர்ட் அளிக்கப்படுகிறது. படங்களை வாடகை முறையில் 10 ரூ முதல் 50 ரூபாய் வரை பணம் கட்டி ஓர் நாள் வரையும் , ஆறு மாதங்களுக்கு ரு.200 ரூபாயும். வருடத்திற்கு ரூ.365 ருபாய் மட்டுமே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மூவி வுட் தளத்தில் ஸ்டைல்…
Read More
“தந்துவிட்டேன் என்னை” அக்டோபர் 23 அன்று ஜீ5 க்ளப்பில் ரிலீஸ்!

“தந்துவிட்டேன் என்னை” அக்டோபர் 23 அன்று ஜீ5 க்ளப்பில் ரிலீஸ்!

ஓடிடி தளத்தின் ட்ரெண்ட்செட்டரான ஜீ5 ஒவ்வொரு முறையும் தன் வாடிக்கை யாளர் களை மகிழ்விக்க தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது ஜீ5 தனது தமிழ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அது ஜீ5-யின் மாபெரும் வெப் சீரிஸான “தந்துவிட்டேன் என்னை” பற்றிய அறிவிப்பு. இது மாபெரும் வெற்றிபெற்ற மராத்தி சீரிஸான ‘ஹோனர் சுன் மே ஹ்யா கர்ச்சி’-யின் ரீமேக் ஆகும். “தந்துவிட்டேன் என்னை” ஒரு முழுமையான குடும்ப பொழுது போக்காகவும், ஒரு குடும்பத்தில் எழும் இயல்பான மற்றும் நகைச்சுவையான சூழல்களின் கலவையாகவும் இருக்கும். “தந்துவிட்டேன் என்னை” சீரிஸில் அஷ்வின் மற்றும் ஹரிப்ரியா பிரதான கதா பாத்திரங்களில் நடிக்கின்றனர். பல்வேறு பிரபல சீரியல்களில் பிரதான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் இருவரும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள். பிரபல நடிகை சீதா இந்த வெப் சீரிஸில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தர்ஷா குப்தா, ரெதிகா ஸ்ரீனிவாஸ், ராகவி, துர்கா, நீபா…
Read More
கவுதம் மேனன் தயாரிப்பில் ‘வீக் எண்ட் மச்சான்’ -என்னும் புதிய இணையத் தொடர்!

கவுதம் மேனன் தயாரிப்பில் ‘வீக் எண்ட் மச்சான்’ -என்னும் புதிய இணையத் தொடர்!

'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் கவுதம் மேனன். 'அச்சம் என்பது மடமையடா'','நெஞ்சம் மறப்பதில்லை', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்களை இந்நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். தள்ளிபோகாதே' பாடலில் ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் 150 மில்லியன்களுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்று, இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை பெற்றுள்ளது 'ஒன்றாக என்டர்டைன்மெண்ட்' யு டியூப் சேனல். அந்நிறுவனத்தின் யூ-டியூப் சேனலில் ’உரையாடல் அண்ட் ஸ்டஃப்' என்ற பெயரில் பிரபலங்களை கவுதம் மேனன் எடுத்த வீடியோ பேட்டிகள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போதுள்ள கால மாற்றத்துக்கு ஏற்றவாறு, புதிதாக இணையத் தொடர் ஒன்றை தயாரித்துள்ளார் கவுதம் மேனன். 'வீக் எண்ட் மச்சான்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் முழுக்க இளைஞர்களை மையம் கொண்டே உருவாக்கியுள்ளனர். வார கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான கொண்டாட்டங்களுக்கு ஒன்றாக…
Read More