பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வாகை சூட வா திரைப்படம்!

பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வாகை சூட வா திரைப்படம்!

அன்பு பத்திரிக்கையாளர் நண்பர்களே, தேசிய விருது பெற்ற வாகை சூடவா திரைப்படம் வெளிவந்து இன்றுடன் பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. தேசிய விருது பெற்ற இந்த வாகை சூடவா திரைப்படத்தை வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ரசிகப் பெருமக்கள், அதிலும் கல்லூரி மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதனைப் பார்த்து நாங்களும் எங்கள் வாகைசூடவா குழு சார்பாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. தேசிய விருது, மாநில விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் மற்றும் வெளிநாடுகளில் பல விருதுகள் அள்ளிக் குவித்த வாகை சூடவா திரைப்படத்தின் தயாரிப்பாளரான நான் அதில் நடித்த விமல், இனியா, இயக்குனர் சற்குணம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், உடை வடிவமைப்பாளர் நடராஜன், எடிட்டர் ராஜாமுகமது போன்ற எல்லோரையும் ஒன்றிணைத்து ஜிப்ரான் ஸ்டூடியோவில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினோம். எங்கள் வெற்றியில் துணை நின்ற அனைத்து ரசிகர்களுக்கும் எங்கள் வாகை…
Read More
சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் பட இயக்குநர் யார்? அந்த வாய்ப்பு கிடைத்தது எப்படி?

சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் பட இயக்குநர் யார்? அந்த வாய்ப்பு கிடைத்தது எப்படி?

கழுகு 2 படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. "1 பந்து 4 ரன் 1 விக்கெட்" பட இயக்குனர் வீரா இந்த படத்தை இயக்குகிறார்.. இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் இந்தப்படம் ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குனர் வீரா. இதனால் அவரை கவுரவப் படுத்தும் விதமாக, நன்றிக்கடனாக இந்த பட வாய்ப்பை, அவருக்கு வழங்கியுள்ளார் சிங்காரவடிவேலன். வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.
Read More